Header Logo
SLIC
வணிகம்
செலான் வங்கி, இலங்கையின் விவசாயத் துறையை வலுப்படுத்த ‘செலான் நேசக்கரம் (அத்வெல)’ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

Jun 30, 2026 - 10:43 AM

செலான் வங்கி, இலங்கையின் விவசாயத் துறையை வலுப்படுத்த ‘செலான் நேசக்கரம் (அத்வெல)’ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது
Mobitel Inner 1278
EDEX Inner

செலான் வங்கி, அபிவிருத்தி நிதியத் திணைக்களத்துடன் இணைந்து, செலான் நேசக்கரம் என்ற சலுகை நிதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத் திட்டம், விவசாயிகள், விவசாய வணிகங்கள் மற்றும் வேளாண்மை சார்ந்த நிறுவனங்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய நிதி கிடைப்பதை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் விவசாயத் துறையை வலுப்படுத்துவதை நோக்காகக் கொண்டது. 

பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் வளர்ச்சியை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ள வங்கியாக, செலான் வங்கி, வணிகங்கள் நவீன விவசாய தொழிலநுட்பங்களில் முதலீடு செய்யவும், செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், நிதித் தடைகளை கடக்கவும் உதவும் நிதித்தீர்வுகளை வழங்குவதன் மூலம் விவசாய மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Farming System Sustainability Programme ஆக (FSSP) செயல்படும் இந்த முயற்சி, கிராமப்புற வாழ்வாதாரங்களை தக்கவைப்பதற்கும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், வேலைவாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கும், ஏற்றுமதி சார்ந்த விவசாயத்தை ஊக்கப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

செலான் நேசக்கரத் திட்டத்தின் ஊடாக தகுதியுள்ள விவசாயிகள், விவசாய வணிகங்கள், விவசாய தொழில்துறைகள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள், 5% என்னும் குறைந்த வட்டி வீதத்தில், நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் தெரிவுகள் மற்றும் சலுகைக் காலங்களுடன் சலுகை நிதியுதவியைப் பெறலாம். மேலும், இத்திட்டம் மொத்த திட்டச் செலவுகளில் 75% வரை நிதியுதவி அளிப்பதால், வணிகங்கள் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொள்வதை எளிதாக்குகின்றது. 

இத்திட்டம், பயிர்ச்செய்கை நடவடிக்கைகள், விவசாய வணிகங்கள், விவசாய தொழில்துறைகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அது சார்ந்த நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கின்றது. மேலும், விவசாயத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் அதிகப்படியான பங்களிப்பை ஊக்குவிக்கவும் முயல்கிறது. அத்துடன், இத்துறையில் உற்பத்தித்திறன், வருமான உருவாக்கம் மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

செலான் நேசக்கரத் திட்டத்தின் கீழ் பலதரப்பட்ட விவசாயம் மற்றும் விவசாய வணிகத் தேவைகளுக்கான கடன்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதில் பயிர்ச்செய்கை மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் (தேயிலை, இறப்பர் மற்றும் தென்னைப் பயிர்ச்செய்கை தவிர்த்து), தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை தொடர்பான பதப்படுத்தல் மற்றும் மதிப்புக்கூட்டல் நடவடிக்கைகள், இயந்திரங்கள், கால்நடைகள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவு, கொட்டகைகள், பண்டகசாலை, பதப்படுத்தும் மையங்கள் மற்றும் பசுமைக்குடில்கள் கட்டமைத்தல், சூரிய மின்சக்தி மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை உள்ளடங்கும். அத்துடன் விவசாய நடவடிக்கைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய நிலம் மற்றும் வாகனங்கள் கொள்வனவு ஆகியவற்றிற்கு தேவையான கடன்களையும் பெறலாம். 

இத் திட்டம், விவசாய வணிகச் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக புதிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதையும் ஆதரிக்கிறது, மேலும் தகுதியுள்ள நிறுவனங்களுக்கு தொழிற்பாட்டு மூலதன நிதியுதவியையும் வழங்குகிறது. அதிகபட்சமாக ரூ. 5 மில்லியன் வரையான கடன் வசதிகள் கிடைக்கின்றன. தொழிற்பாட்டு மூலதனக் கடன்களை மூன்று ஆண்டுகள் வரையிலான காலத்திற்குள் திருப்பிச் செலுத்தலாம். அதே வேளை முதலீடு மற்றும் ஒருங்கிணைந்த கடன் வசதிகள் ஐந்து ஆண்டுகள் வரையிலான திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை வழங்குகின்றன. 

செலான் நேசக்கரம் போன்ற முன்முயற்சிகள் மூலம் நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்கும் உள்வாங்கிய நிதித்தீர்வுகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் SME மற்றும் விவசாயத் துறைகளை வலுவூட்டுவதற்கான அதன் உறுதிப்பாட்டை செலான் வங்கி தொடர்ந்து வெளிப்படுத்துகிறது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278