Jun 30, 2026 - 11:20 AM -
0
மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
நாளை (01) நடைபெறும் தவெக கூட்டணி கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்பர்.
தவெக அரசிற்கு ஆதரவு நல்கும் எந்த கட்சிகளும் வாக்கு தவற வாய்ப்பில்லை. 5 ஆண்டுகள் தவெக ஆட்சி தொடர விசிக துணை நிற்கும்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும். எம்எல்ஏக்கள் ராஜினாமாவுக்கு அதிமுகவில் உள்ள உட்கட்சி பிரச்சனைகள் தான் காரணம் என தெரிவித்தார்.

