Jun 30, 2026 - 03:51 PM -
0
விஷால் தற்போது மகுடம் என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி முடித்துள்ளார். முதலில் இப்படத்தை ரவி அரசு இயக்கி வந்தார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக அவர் வெளியேற பின்பு விஷாலே இயக்கி நடித்துள்ளார்.
இப்படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன், எமோஷன் கலந்த விறுவிறுப்பான படமாக உருவாகுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான ‘ரைஸ் ஆஃப் லிங்கா’ ஒவ்வொன்றாக சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதையடுத்து இரண்டாவது பாடலாக ‘நச்சிந்தி மச்சானே’ பாடல் வெளியாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய விஷால், “30 வருடமாக எனக்கு இருந்த கனவு இப்போது நிஜமாகி இருக்கிறது. நாகார்ஜூனா நடிப்பில் ராம் கோபால் வர்மா இயக்கிய `சிவா' படத்தைப் பார்த்தபோது இயக்குநர் ஆகும் முடிவு எடுத்து, இப்போது அது நிஜமாகி இருக்கிறது.
சில படங்களை மறைமுகமாக இயக்கம் செய்திருக்கிறேன். ஆனால் அவற்றின் பெயரை வெளியே சொல்ல முடியாது. அதிகாரப்பூர்வமாக இது என்னுடைய அறிமுகப்படம்.
முதல் பட இயக்குநராக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப்பார்த்துச் செய்ய வேண்டும். இப்படத்தை முதலில் நான் இயக்குவதாக இல்லை. சில நெகட்டிவான விஷயங்களை விலக்கி வைத்துவிட்டுப் பணியாற்ற வேண்டியதாக இருந்தது. எனவே, இந்தப் படத்துக்குள் இயக்குநராக நான் நுழைந்தேன்” என்றார்.

