Header Logo

வணிகம்
Mark and Comm நிறுவனம் இலங்கையின் தேசிய பொதுத் தொடர்பு உச்சிமாநாட்டிற்கு பிளாட்டினம் அனுசரணை வழங்கியது

Jun 30, 2026 - 04:08 PM -

0

Mark and Comm நிறுவனம் இலங்கையின் தேசிய பொதுத் தொடர்பு உச்சிமாநாட்டிற்கு பிளாட்டினம் அனுசரணை வழங்கியது

இலங்கையின் சிறப்பு மூலோபாய பொதுத் தொடர்பு (PR) மற்றும் தொடர்பாடல் முகவர் நிறுவனமான Mark and Comm (Pvt) Ltd, ஆனது Campaign அமைப்பினால் 2025 ஆம் ஆண்டிற்கான தெற்காசியாவின் (இந்தியாவைத் தவிர்ந்த) சிறந்த PR நிறுவனம் எனத் தெரிவு செய்யப்பட்ட நிலையில், 2026 ஜூன் 18 ஆம் திகதி நடைபெற்ற தேசிய பொதுத் தொடர்பு உச்சிமாநாடு 2026 (NPRS 2026) நிகழ்வின் பிளாட்டினம் அனுசரணையாளராகப் பணியாற்றியது. இந்நிகழ்வை களனிப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பியல் துறை ஏற்பாடு செய்திருந்தது. இம்மாநாடானது, இலங்கையில் பொதுத் தொடர்பு கல்வி மற்றும் தொழில்முறை நடைமுறைகளின் தற்போதைய நிலையை ஆராய்வதற்காக கல்வியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள், ஊடக நிறைவேற்றதிகாரிகள் மற்றும் அரசாங்க தொடர்பாடல் அதிகாரிகளை ஒருங்கிணைத்தது. மேலும், களனிப் பல்கலைக்கழகம் பொதுத் தொடர்பு மற்றும் ஊடக முகாமைத்துவத்தை கல்வித் துறையாக அறிமுகப்படுத்தி பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததையும் இந்நிகழ்வு குறித்தது. இதன் மூலம் அந்தப் பாடத்துறையை அறிமுகப்படுத்திய நாட்டின் முதலாவது அரசாங்கப் பல்கலைக்கழகமாக அது திகழ்கிறது. 

இலங்கையின் பொதுத் தொடர்பு (PR) துறை தனது சொந்த வட்டார விவாதங்களுக்குள் மட்டுமே இருந்து வளர்ச்சியடைய முடியாது என்பதை Mark and Comm கடந்த பல ஆண்டுகளாக பொதுவெளியில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உலகின் மிகப்பெரிய பொதுத் தொடர்பு அமைப்பான PRCA-வின் பிரதிநிதித்துவத்தின் மூலம் இலங்கையை சர்வதேச PR துறையுடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகித்த Mark and Comm நிறுவனத்தின்முகாமைத்துவப் பணிப்பாளர் தன்சில் தாஜுதீன், துறைத்தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் மனோஜ் ஜினதாசாவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்விலும் பங்கேற்றார். 

பன்னாட்டு மக்கள் தொடர்பு [CIPR] அமைப்பின் உயர் தகுதிவாய்ந்த உறுப்பினரும் பட்டய மக்கள் தொடர்பு நிபுணருமான தாஜுதீன், ஆசிய-பசிபிக் மக்கள் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு சபை [PRCA APAC Board] மற்றும் பன்னாட்டு மக்கள் தொடர்பு சர்வதேசக் குழு. [CIPR International Committee] ஆகியவற்றில் உறுப்பினராகப் பணியாற்றும் இலங்கையின் ஒரே சிரேஷ்ட PR நிறுவனத் தலைவராக உள்ளார். மேலும் அவர் PRCA கல்வி ஆலோசனைச்சபை மற்றும் அங்கத்துவக்குழு ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளதுடன், முன்னதாக PRCA பேரவை மற்றும் CIPR தொழில்சார் தரக்குழு ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். பொதுத் தொடர்பு அஸ்தமித்து விட்டதா, அல்லது அதை வரையறுப்பதை நாம் நிறுத்திவிட்டோமா? என்ற தலைப்பில் நடைபெற்ற அவரது கலந்துரையாடல் அமர்வு, Muck Rack நிறுவனத்தின் Generative Pulse அறிக்கையின்படி தற்போது AI மேற்கோள்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை ஈட்டப்பட்ட ஊடகச் செய்திகளிலிருந்தே உருவாகின்றன; அதேவேளை கட்டண அடிப்படையிலான மற்றும் விளம்பரக் கட்டுரைகள் வெறும் 0.3 சதவீதம் மட்டுமே பங்காற்றுகின்றன என்ற தகவலுடன் தொடங்கியது. ஒரு செய்தி ஒரு பத்திரிகையாளரின் கவனத்தை ஈர்க்க முடியாவிட்டால், அதனை ஒரு AI இயந்திரமும் கண்டறிய முடியாது என்று அவர் வலியுறுத்தினார். 

பொதுத் தொடர்பு துறை சுருங்கவில்லை; மாறாக அது மேலும் மூலோபாய நிலைக்குச் சென்றுள்ளது. மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட Burson நிறுவனத்தின் உலகளாவிய அங்கீகார பொருளாதார அறிக்கையையும் அவர் மேற்கோள் காட்டினார். அந்த அறிக்கையின்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நற்பெயருடன் தொடர்புடைய நிதியின் பெறுமதி 7.07 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. வலுவான நற்பெயரைக் கொண்ட நிறுவனங்கள் ஆண்டுதோறும் பங்குதாரர்களுக்கு மேலதிகமாக சுமார் 5 சதவீத வருமானத்தை வழங்குகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நற்பெயர் இனி ஒரு மென்மையான அளவுகோல் அல்ல; அது மதிப்பிடக்கூடிய பெறுமதி கொண்ட உறுதியான சொத்தாகும் , என்று தாஜுதீன் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டோரிடம் தெரிவித்தார். பொதுத் தொடர்பு உண்மையிலேயே அஸ்தமித்து விட்டது என்றால், அதை நிறுவனத்தின் ஐந்தொகை அறிக்கைக்கு யாரோ தெரிவிக்க மறந்துவிட்டார்கள். 

PRCA APAC உடன் இணைந்து செயல்பட்ட இலங்கையின் முதலாவது பொதுத் தொடர்பு (PR) நிறுவனமாக Mark and Comm திகழ்கிறது. மேலும், உள்ளூர் மற்றும் பிராந்திய அளவிலான முன்னணி பொதுத் தொடர்பு நிபுணர்களின் பங்களிப்புடன் ஆண்டுதோறும் நிறுவன ஆய்வுகள் மற்றும் இணையவழி கருத்தரங்குகளை நடத்திய முதல் நிறுவனமும் இதுவே ஆகும். இதனுடன், கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் மக்கள் ஊடக அமைச்சிடம் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட தனது ‘இதழியல் அறிக்கையின் நிலை’மூலம் ஊடகத் துறைக்காக வலியுறுத்திய முதல் பொதுத் தொடர்பு நிறுவனமாகவும் அது விளங்குகிறது. நாம் தொடர்ந்து வளங்கள் குறைவடைந்த செய்தியறைகளுக்கு செய்திக் குறிப்புகளை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் அவற்றின் நலனுக்காக குரல் கொடுக்கவில்லை. நாம் எதையும் திருப்பிக் கொடுக்காமல் ஒரு வளத்தை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது நிறுத்தப்பட வேண்டும். இதழியல்துறை இல்லாமல் பொதுத் தொடர்பு இருக்க முடியாது, என்று தாஜுதீன் தெரிவித்தார். 

உள்ளூர் பொதுத் தொடர்பு (PR) துறையைப் பற்றிப் பேசும்போதும் அவர் அதே அளவு வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். வாடிக்கையாளர்கள் இன்னும் மூலோபாய ஆலோசனைகளை விட ஊடக வெளிப்பாட்டின் அளவு அல்லது அதன் முக்கியத்துவத்தையே அதிகமாக நாடுகின்றனர். நெருக்கடி முகாமைத்துவத் திட்டங்கள் ஆவணங்களில் இருந்தாலும், நடைமுறையில் அவை செயல்படுத்தப்படுவதில்லை. பட்டதாரிகள் செய்திக் குறிப்புகள் எழுதுவதற்குப் பயிற்சி பெறுகின்றனர்; ஆனால் அவர்கள் ஒரு நிறுவனத்தின்பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு மூலோபாய ஆலோசனைகளை வழங்கக் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். நிறுவனங்கள் தமது மூலோபாயத் தீர்மானத் திறனின் அடிப்படையில் அல்லாது , கட்டண பட்டியல்களின் அடிப்படையில்தான் பெரும்பாலும் 

போட்டியிடுகின்றன, என்று அவர் தெரிவித்தார். ஊடகத் தொடர்பு சேவைகளை விட நிறுவன நற்பெயர் முகாமைத்துவ மற்றும் மூலோபாய ஆலோசனைச் சேவைகளே உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் சேவைப் பிரிவுகள் என்பதை காட்டும் சர்வதேச ஒப்பீட்டு தரவுகளையும் அவர் மேற்கோள் காட்டினார். அரங்கில் இருந்த மாணவர்களுக்கான அவரது செய்தி மிகவும் தெளிவானதாக இருந்தது. ஆரம்பநிலைப் பணிகளில் பல ஏற்கனவே தானியக்கமயமாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பல ஆண்டுகளாக ஒரு பத்திரிகையாளரின் நம்பிக்கையை உருவாக்குவது, வாடிக்கையாளர் தாமே உணர முடியாத சூழ்நிலையை சரியாகப் புரிந்துகொள்வது, மற்றும் தவறான முடிவெடுக்க உள்ள ஒரு பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு சரியான ஆலோசனையை வழங்குவது போன்ற திறன்கள் தானியக்கமடைய முடியாதவை. அதுவே பொதுத் தொடர்பு கல்வி சிறப்பாகக் கற்பிக்க வேண்டிய பகுதியாகும் , என்று அவர் தெரிவித்தார். 

உச்சிமாநாட்டிலிருந்து Mark and Comm நிறுவனம் பெற்ற முக்கியப் பாடங்கள் மிகவும் தெளிவானவை. AI இயந்திரங்கள் தற்போது கட்டண அடிப்படையிலான உள்ளடக்கங்களை விட நம்பகத்தன்மை வாய்ந்த பத்திரிகைச் செய்திகளிலிருந்தே பெருமளவில் தகவல்களைப் பெறுவதால், ஈட்டப்பட்ட ஊடக வெளிப்பாடு இதுவரை இல்லாத அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. பொதுத் தொடர்பின் உண்மையான பெறுமதி வெறும் பிரசாரத்தில் அல்லாது மூலோபாய ஆலோசனையில்தான் உள்ளது. எதிர்வினை அடிப்படையிலான கண்காணிப்புக்கு பதிலாக, கதைநயமான நுண்ணறிவு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். நோக்கமுள்ள தகவல்தொடர்பு இனி மேலதிக சிறப்பம்சமல்ல; அது அடிப்படைத் தேவையாக மாறியுள்ளது. கல்வித்துறைக்கும் தொழில்முறை நடைமுறைக்கும் இடையிலான இடைவெளி அவசரமாக கவனிக்கப்பட வேண்டும். துறை சார்ந்திருக்கும் ஊடகச் சூழலமைப்புக்கு வெறும் செய்தி அனுப்புதல்களைத் தாண்டி ஆதரவும் குரலும் வழங்கப்பட வேண்டும். மேலும், செயல்திறன் மதிப்பீடு வெறும் செய்திக் குறிப்புகள் அல்லது ஊடக வெட்டுப்பிரதிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டதாக இல்லாமல், பணிப்பாளர் சபை மட்டத்திலும் பொருத்தமுள்ள வர்த்தக முடிவுகள் மற்றும் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.


MOST READ

காணொளி
அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!