Header Logo
SLIC
கிழக்கு
மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

Jul 1, 2026 - 10:38 AM

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!
Mobitel Inner 1278
EDEX Inner

மட்டக்களப்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பார் வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அந்த உணவகம் பெருமளவில் சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் இன்று (01) நிகழ்ந்துள்ளது. 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 

குறித்த உணவகத்தில் திடீரெனப் பரவிய தீயைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புப் பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பொதுமக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. 

முதற்கட்ட விசாரணைகளின்படி, உணவகத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு (Short Circuit) காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 

தீ விபத்தின் காரணமாக உணவகத்தில் இருந்த தளபாடங்கள், சமையல் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. 

எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

நகரின் முக்கிய வீதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278