Header Logo

விளையாட்டு
மெஸ்சியை நெருங்கும் எம்பாப்பே!

Jul 1, 2026 - 11:10 AM -

0

மெஸ்சியை நெருங்கும் எம்பாப்பே!

உலகக் கிண்ண நாக்-அவுட் சுற்றுகளில் அதிக கோல்கள் அடித்து பிரேசிலின் ரொனால்டோ நசாரியோ மற்றும் லியோனிடாஸ் ஆகியோரின் சாதனைகளை எம்பாப்பே முறியடித்துள்ளார். 

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இன்று (01) நடைபெற்ற 2 ஆவது சுற்று ஆட்டத்தில், பிரான்ஸ் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் சுவீடன் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே 2 கோல்களை அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். 

இந்த இரண்டு கோல்களின் மூலம், நடப்பு உலகக் கிண்ண தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர்களுக்கான 'கோல்டன் பூட்' பட்டியலில் எம்பாப்பே மொத்தம் 6 கோல்களுடன் லியோனல் மெஸ்சிக்கு இணையாக முன்னிலை வகித்து வருகிறார். 

அதேநேரத்தில், உலகக் கிண்ண நாக்-அவுட் சுற்றுகளில் எம்பாப்பே அடித்த கோல்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 

இதன் மூலம், உலகக் கிண்ண நாக்-அவுட் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பிரேசிலின் ரொனால்டோ நசாரியோ மற்றும் லியோனிடாஸ் ஆகியோரின் சாதனைகளை முறியடித்து, எம்பாப்பே புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 

உலகக் கிண்ண நாக்-அவுட் சுற்றுகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள், 

எம்பாப்பே (பிரான்ஸ்) - 10 கோல்கள் 

ரொனால்டோ நசாரியோ (பிரேசில்) - 8 கோல்கள் 

லியோனிடாஸ் (பிரேசில்) - 8 கோல்கள் 

மேலும், உலகக் கிண்ண போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 19 கோல்களுடன் லியோனல் மெஸ்சி முன்னிலையில் உள்ள நிலையில், 18 கோல்களுடன் எம்பாப்பே அவரை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்