Header Logo

செய்திகள்
விவசாயிகளின் பிரச்சினைகள் நாட்டின் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளது

Jul 1, 2026 - 01:45 PM -

0

விவசாயிகளின் பிரச்சினைகள் நாட்டின் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளது

விவசாயிகள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினையே நாட்டின் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

 

பொலன்னறுவையில் விவசாயத் தலைவர்களுடன் இன்று (01) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை அரசாங்கம் தனது பிரதான கடமையாகக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

 

சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர, இன்று முற்பகல் மெதவாச்சிய பிரதேசத்திற்குச் சென்று, பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவசாயத் தலைவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் சர்வஜன அதிகாரத்தின் உப தலைவர் கலாநிதி சன்ன ஜயசுமன மற்றும் பிரதிச் செயலாளர் ருஷான் மலிந்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

இதன்போது கருத்துத் தெரிவித்த திலித் ஜயவீர எம்.பி:

 

"இப்போது விவசாயிகளை கேலிக்குள்ளாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரச்சினை குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. உலகளாவிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் எழும் போட்டிகளை எதிர்கொள்ளும் திறன் எங்களிடம் உள்ளது. விவசாயியை ஒரு 'விவசாய தொழில்முனைவோராக' மாற்றும் வேலைத்திட்டம் குறித்து நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். இதுவே தற்போது இந்த நாட்டில் உள்ள மிகப்பெரிய தேசியப் பிரச்சினை. மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இதையே முதன்மையான பிரச்சினையாகக் கொள்ள வேண்டும். ஒருபுறம் விவசாயி, மறுபுறம் நுகர்வோர் எனப் பார்க்க வேண்டும். நீண்டகாலமாக நாங்கள் பாதுகாத்து வந்த நமது விவசாய கலாச்சாரத்தை, இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா அரிசியால் மூடிமறைக்க முயற்சிப்பார்களேயானால், அதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும்."

 


MOST READ

காணொளி
பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்