Header Logo
Mogo Academy

செய்திகள்
கடைசி நிமிட அதிரடியால் செனகலை வீழ்த்திய பெல்ஜியம்

Jul 2, 2026 - 06:09 AM -

0

கடைசி நிமிட அதிரடியால் செனகலை வீழ்த்திய பெல்ஜியம்
Mobitel inner

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் கடைசி நிமிடத்தில் டையலெமன்ஸ் அடித்த கோலால் செனகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி பெற்றது. 

பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து 2-வது சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன. 

இதில், நள்ளிரவு 1.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் மற்றும் செனகல் அணிகள் மோதின. 

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் சியாட்டில் மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் 24-வது நிமிடத்தில் முதல் கோல் அடிக்கப்பட்டது. 

செனகல் அணியின் வீரர் ஹபீப் டையர்ரா முதல் கோலை போட்டார். 

எனினும், அதன்பின்னர் இரு அணிகளின் தரப்பிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. 

இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-1 என செனகல் முன்னிலை பெற்றுள்ளது. போட்டியின் முதல் பாதியில் எந்த அணிக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்படவில்லை. 

போட்டியின் 2-வது பாதியில் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இதில் செனகல் அணியின் இஸ்மாயிலா சார் 51-வது நிமிடத்தில் அணிக்கான 2-வது கோலை போட்டார். 

2 கோல்களுடன் செனகல் முன்னிலையில் இருந்தது. பெல்ஜியம் அணி பின்தங்கி இருந்தது. 

ஆனால், போட்டி முடிய கடைசி 5 நிமிடங்கள் இருந்தபோது, அதிசயம் நடந்தது. 86-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் ரோம்லு லுகாகு கோல் போட்டு செனகல் அணிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். 

அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் 89-வது நிமிடத்தில் யூரி டையலெமன்ஸ் பெல்ஜியம் அணிக்கான மற்றொரு கோலை போட்டார். 

இதனால், 2-2 என போட்டி சமன் அடைந்தது. மேலதிக நேரம் அளிக்கப்பட்டு, ஆட்டம் தொடர்ந்தது. எனினும், மொத்தம் 120 நிமிடங்கள் வரை போட்டி நீடித்தும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. 

அதன்பின்னர் 125-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, யூரி டையலெமன்ஸ் அடித்த கோலால் பெல்ஜியம் அணி 3 கோல்களுடன் முன்னிலை பெற்றது. 

அதன்பின்னர் கோல்கள் அடிக்கப்படவில்லை. இதனால், கூடுதல் நேர முடிவில், பெல்ஜியம் வெற்றி பெற்றது. 

2-வது பாதியின் கடைசி நிமிடத்தில் டையலெமன்ஸ் அடித்த கோலால் செனகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி பெற்றது. போட்டியின் 2-வது பாதியில் இரு அணிகளுக்கும் தலா ஒரு முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara