Header Logo
Mogo Academy

செய்திகள்
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

Jul 2, 2026 - 07:49 AM -

0

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி
Mobitel inner

கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 138,241 ஆகும் என அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 

ஜூன் மாதத்தில் 43,423 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 35% என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, கடந்த மாதத்தில் பிரித்தானியாவில் இருந்து 10,474 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 8,710 பேரும், சீனாவிலிருந்து 8,224 பேரும் மற்றும் அமெரிக்காவிலிருந்து 3,806 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 

மே மாதத்தில் 145,745 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் நாட்டிற்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,146,573 வரை அதிகரித்துள்ளது. 

இந்த எண்ணிக்கையினருள் 293,683 இந்திய சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 108,567 பேரும், ரஷ்யாவிலிருந்து 77,349 பேரும் மற்றும் சீனாவிலிருந்து 76,171 பேரும் அடங்குவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara