Header Logo

இந்தியா
தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் - மேலும் 6 பேர் கைது!

Jul 2, 2026 - 10:17 AM -

0

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் - மேலும் 6 பேர் கைது!

108 தொகுதிகளில் வென்ற விஜய் தலைமையிலான த.வெ.க., தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. 

அதே நேரம் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள். 

சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகருக்கு எதி​ராகத் தீர்​மானம் கொண்டு வர உள்​ள​தாக​வும் ஆளும் கட்சி உறுப்​பின​ராக இருந்தாலும் நாங்​கள் சொல்​வது போல் கேட்டு சபா​நாயகருக்கு எதி​ராக வாக்​களிக்க வேண்​டும் என்​றும், அதற்கு 35 கோடி ரூபா வரை பணம் கிடைக்கும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்​டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா​விடம் சிலர் பேசி உள்ளனர். இதுதொடர்பாக அவர் சென்னை பொலிஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து புகார் அளித்தார். 

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் இதுவரை 5 பேரை கைது செய்துள்ளனர். 

தவெக ஆட்சியை கவிழ்க்க 35 கோடி ரூபா பேரம் பேசிய விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியாகி உள்ளது. 

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளைராஜா அளித்த புகாரை வைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன், அசோக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீது 4 பிரிவுகளில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், குற்றச்சதிக்கு உடந்தையாக இருத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் அசோக் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த 3 பேரும், கரூரை சேர்ந்த 2 பேரும், நாமக்கல்லை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையை சேர்ந்த செல்வன், ஸ்ரீநிவாசன், ராஜேஷ், கரூரை சேர்ந்த ரமேஷ், கார்த்திக், நாமக்கல்லை சேர்ந்த அசோக்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!