Header Logo
SLIC
உலகம்
உக்ரைன் போரில் 20 லட்சத்தை கடந்த இழப்புகள்!

Jul 2, 2026 - 11:16 AM

உக்ரைன் போரில் 20 லட்சத்தை கடந்த இழப்புகள்!
Mobitel Inner 1278
EDEX Inner

அமெரிக்காவின் think tank ஒன்று வெளியிட்ட ஆய்வின்படி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் 20 லட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் உயிரிழப்பு அல்லது காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதில் ரஷ்ய படைகளே அதிக இழப்புகளை சந்தித்துள்ளன. 

"ரஷ்ய மற்றும் உக்ரேனிய தரப்பில் ஏற்பட்ட மொத்த இழப்புகள் (உயிரிழப்பு மற்றும் காயங்கள்) 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது," என்று 'மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம்' (CSIS) தெரிவித்துள்ளது. 

பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது முதல், ரஷ்யப் படைகளில் மொத்தம் 14 லட்சம் பேர் (உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள்) பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 4 லட்சம் முதல் 4.5 லட்சம் வரையிலான ரஷ்யர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது. 

அதே காலகட்டத்தில், உக்ரேனிய படைகளில் 5.25 லட்சம் முதல் 6.25 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் CSIS கூறியுள்ளது. 

"இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா பங்கேற்ற அனைத்து போர்களிலும் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளை விட, உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் நான்கு மடங்குக்கும் அதிகமாகும்" என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278