Header Logo
Mogo Academy

செய்திகள்
முதலாவது ஈ-பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்

Jul 2, 2026 - 01:04 PM -

0

முதலாவது ஈ-பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்
Mobitel inner

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2025/2026 ஆம் ஆண்டுகளுக்குரிய இலங்கையின் முதலாவது ஈ-பொருளாதார கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் இந்த தேசிய வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கம், நாட்டின் விவசாயம் சாரா பொருளாதார நடவடிக்கைகள் குறித்த அண்மைக்கால மற்றும் நம்பகமான புள்ளிவிபரத் தகவல்களைத் திரட்டுவதாகும். 

தரவுகளின் அடிப்படையிலான பொருளாதாரத் திட்டமிடலுக்கு வலுவானதொரு அடித்தளத்தை வழங்கும் இத்தொகைமதிப்பு, நாட்டில் தற்போதுள்ள அனைத்து கைத்தொழில், நிர்மாணம், வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்படுகின்றது. 

இந்தத் தொகைமதிப்பின் முதற்கட்டமாக, 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட பெரிய அளவிலான நிறுவனங்களின் தகவல்களைச் சேகரிக்கும் பணிகள் நேற்று (01) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இந்த நவீன டிஜிட்டல் முறையின் கீழ், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில், எந்தவொரு இடத்திலிருந்தும் சுயாதீனமாக இணையம் ஊடாகப் பாதுகாப்பாகவும், எளிதாகவும், வினைத்திறனுடனும் தகவல்களைச் சமர்ப்பிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara