Jul 2, 2026 - 04:03 PM -
0
தென்னிந்திய சினிமாவில் 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை செளந்தர்யா ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் கடந்த 2004 ஏப்ரல் 16 ஆம் திகதி விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
தன்னுடைய சகோதர் அமர்நாத்துடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெங்களூரு சென்றபோது தெலுங்கானா, கரீம்நகரில் செளந்தர்யா பயணித்த விமானம் விழுந்து நொறுங்கியதால் சம்பவ இடத்திலேயே செளந்தர்யா உயிரிழந்தார்.
விமான விபத்து நடந்து 22 ஆண்டுகளாகிவிட்டது. அப்போது அவருக்கு 31 வயது இருக்கும்.
இந்நிலையில் இயக்குநர் கீதா கிருஷ்ணா சமீபத்திய பேட்டியொன்றில் செளந்தர்யா குறித்து சர்ச்சையான கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், செளந்தர்யா தன்னுடைய தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் போது தவறான முடிவை எடுத்தார்.
2004 மக்களவை தேர்தலின்போது அப்போதைய பாஜக தலைவர் சி வித்யாசாகர் ராவ், பிரச்சாரத்திற்காக அவருக்கு 2 லட்சம் ரூபா மட்டுமே வழங்கியிருந்தார். அவர் ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்யச் சென்று கொண்டிருந்தபோது, அந்த துயரச் சம்பவம் நடந்தது.
அந்த 2 லட்சம் ரூபாய்க்காக அவர் பிரச்சாரத்திற்கு சென்றிருக்காமல் இருந்தால், செளந்தர்யா இன்று நம்முடன் உயிருடன் இருந்திருப்பார் என்று கீதா கிருஷ்ணா கூறியிருக்கிறார்.

