Header Logo

விளையாட்டு
ஹர்சித் ராணாவுக்காக மூத்த வீரரை அசிங்கப்படுத்திய கவுதம் கம்பீர்?

Jul 2, 2026 - 04:20 PM -

0

ஹர்சித் ராணாவுக்காக மூத்த வீரரை அசிங்கப்படுத்திய கவுதம் கம்பீர்?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பயிற்சியாளர் கெளதம் கம்பீர் ஹர்சித் ராணாவுக்காக மூத்த ஸ்டார் வீரரை அசிங்கப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி மழையால் இரத்து செய்யபப்ட்டுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அபிஷேக் சர்மா, அணி தலைவர் ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி அரைசதங்களால் 189 ஓட்டங்களை குவித்தது. 

இதன்பின் தொடர்ந்து கனமழை பெய்ததால் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட முடியாததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெஞ்சில் உட்கார வைக்கபப்ட்டுள்ள வைபவ் சூர்யவன்ஷியை விட, மூத்த ஸ்டார் கிரிக்கெட் வீரருக்குத்தான் அநீதி இழைக்கப்பட்டதாக ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். 

இரண்டு முறை உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் இருந்த அந்த வீரரை பெஞ்சில் உட்கார வைத்தது ஏன்? அந்த வீரர் யார்? என்பதை பார்ப்போம். அதாவது இரண்டு முறை உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் இருந்த ஒரு வீரருக்குப் பதிலாக, இன்னொருவரை களமிறக்கிய பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முடிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட அந்த வீரர் வேறு யாருமல்ல, ஆல்-ரவுண்டர் அக்சர் படேல்தான். இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, அக்சர் போன்ற அனுபவமிக்க வீரரை ஃபினிஷராக களமிறக்குவதுதான் வழக்கம். 

ஆனால், அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில், நேற்று (01) இடம்பெற்ற போட்டியில் 7 ஆவது இடத்தில் அக்சருக்குப் பதிலாக இளம் வீரர் ஹர்ஷித் ராணாவை களமிறக்கினர். ஹர்சித் ராணவும் டக் அவுட்டாகி வந்த வேகத்தில் பெவிலியன் சென்றார். 

ஐபிஎல்-லில் KKR அணிக்காக விளையாடிய ஹர்ஷித், கம்பீரின் செல்லப்பிள்ளை என்பதால் இந்த வாய்ப்பு கிடைத்ததா? என்ற பேச்சும் கிரிக்கெட் வட்டாரத்தில் பரவி வருகிறது. 

உள்ளூர் கிரிக்கெட்டின் இளம் புயலான வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. ஆனால், அவரை விட அக்சர் படேலுக்குத்தான் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டுக்காக பல போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்த ஒரு சீனியர் ஆல்-ரவுண்டரை இப்படிப் புறக்கணித்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

போட்டி தொடங்கியதிலிருந்தே கம்பீர் எடுக்கும் முடிவுகள் குறித்து கிரிக்கெட் ஆய்வாளர்களிடையே பல மாறுபட்ட கருத்துகள் உள்ளன. அந்த நேரத்தில் ராணாவை முதலில் களமிறக்கியது சரியான முடிவு அல்ல என்பது சில மூத்த கிரிக்கெட் வீரர்களின் கருத்து. ஏனெனில், அவருக்கு டி20 ஃபார்மெட்டில் அனுபவம் குறைவு. மேலும், சர்வதேச அளவில் அவர் இன்னும் பக்குவப்பட வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் வாதம். 

மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டாலும், கம்பீரின் வியூகம் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜூலை 4 அன்று மான்செஸ்டரில் நடைபெறவுள்ள இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னதாக, டீம் இந்தியாவின் நிர்வாகம் இந்த பேட்டிங் ஆர்டர் சர்ச்சையை எப்படி கையாளப் போகிறது? அக்சர் படேலுக்கு தகுந்த மரியாதை அளிக்கப்படுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


MOST READ

காணொளி
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!