Header Logo
SLIC
பல்சுவை
இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா?

Jul 2, 2026 - 04:41 PM

இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா?
Mobitel Inner 1278
EDEX Inner

கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகமானால் முக்கியமான 5 அறிகுறிகள் வெளிப்படும். அவை என்னென்ன என்பதை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். 

சமீபகாலமாகவே இந்தியாவில் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஆனால் சோகம் என்னவென்றால், அவர்களில் பலருக்கும் தங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பதே தெரிவதில்லை. 

சொல்லப்போனால் இந்தியாவில் 81.2% மக்கள் ஏதேனும் ஒரு கொழுப்புச் சீர்குலைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 31% பேருக்கு அதிக கொலஸ்ட்ரால் உள்ளது. 

அதிலும் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில்தான் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். இந்தியர்களிடம் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) குறைவாக இருப்பதும், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதுமே பொதுவான பிரச்சனையாக உள்ளது. தற்போது, மாறிவரும் உணவுப் பழக்கம் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறையால் 19 முதல் 40 வயதுடைய இளைஞர்களிடமும் இந்த பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 

முதல்நிலையிலேயே கொலஸ்ட்ரால் பிரச்சனையை அறிவதும், அதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதுமே பல உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. முதல்நிலையிலேயே கொலஸ்ட்ராலை அறிய, அதன் அறிகுறிகளைத் தெரிந்துகொள்வது அவசியம். அவற்றை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். 

1) தலைசுற்றல் அல்லது மயக்கம், கெட்ட கொலஸ்ட்ரால், உயரும்போது ரத்த ஓட்டத்தில் தாக்கம் ஏற்படும். குறிப்பாக இவை மூளை மற்றும் உள் காதுக்குச் செல்லும் ரத்த நாளங்களின் சுவர்களில் படிந்து பாதையைச் சுருக்குகிறது. இதனால் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு தற்காலிகமாகக் குறைந்து, உடலின் சமநிலையைக் கட்டுப்படுத்தும் உள் காது பகுதிக்குக் குருதி ஓட்டம் தடைபட்டு தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படும். 

2) ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் மிக அதிகமாகும் போது, அது கைகளுக்கும் கால்களுக்கும் ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிகளின் சுவர்களில் படிந்து கொழுப்புக்கட்டிகளாக மாறும். இதனால் ரத்த நாளங்கள் சுருங்கி, கைத் தசைகள் மற்றும் நரம்புகளுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ரத்த ஓட்டம் பெருமளவு தடைபடுகிறது. போதிய ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால், கைகளில் பலவீனம், சோர்வு மற்றும் அடிக்கடி மரத்துப்போதல் அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. 

3) கழுத்தோடு சேர்த்து இடது கைகள் கடுக்கும், இது நேரடி அறிகுறி இல்லையென்ற போதும், இதய நோய் அல்லது பக்கவாதத்தின் முக்கிய எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) மிக அதிகமாகும்போது, அது இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும். இதனால் நெஞ்சு வலியுடன் சேர்ந்து அந்த வலி கழுத்து, தாடை மற்றும் இடது கை முழுவதும் பரவுகிறது. மேலும், கொலஸ்ட்ரால் அடைப்பால் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போதும் கழுத்து மற்றும் கை நரம்புகள் செயலிழந்து வலி அல்லது மரத்துப்போதல் ஏற்படலாம். நரம்பு அழுத்தத்தாலும் இந்த வலி வரலாம். 

4) நெஞ்செரிச்சல் / செரிமானப் பிரச்சனைகள், உடலில் ட்ரைகிளசரைட் அளவு அதிகரித்தால் இதுபோன்ற அறிகுறிகள் அதிகமாகத் தெரியும். 

5) அதீத வியர்வை, கொலஸ்ட்ரால் அடைப்பால் இதயம் கடுமையாகப் போராடுவதைக் காட்டும் ஒரு மிக முக்கியமான எச்சரிக்கை அறிகுறியாகும். ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகி இதயத் தமனிகளை அடைக்கும்போது, இதயம் உடலின் பிற பாகங்களுக்கு ரத்தத்தைச் செலுத்த வழக்கத்தை விட மிகக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்; இந்த அதீத அழுத்தத்தின் காரணமாக, உடலின் வெப்பநிலையைக் குறைக்கத் தன்னாட்சி நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு திடீர் திடீரென வியர்வை அதிகமாக வெளியேறும்.


MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278