Header Logo

சினிமா
எய்ட்ஸ் நோயால் 35 ஆவது வயதில் நடிகை மரணம்!

Jul 2, 2026 - 05:03 PM -

0

எய்ட்ஸ் நோயால் 35 ஆவது வயதில் நடிகை மரணம்!

35 வயதான நடிகை ஒருவரின் சமீபத்திய மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனது 35 ஆண்டு கால வாழ்க்கையின் கடைசி காலகட்டத்தில் அந்த நடிகைக்கு என்ன ஆனது என்பது தான் இப்போது திரையுலகில் பேசுபொருளாகியிருக்கிறது. அவர் இறந்து 15 நாட்களுக்குப் பிறகு வெளிவந்துள்ள மரண காரணம் தான் அத்தனைக்கும் காரணம். 

அவரது மரணம் உடல்நல பாதிப்பால் ஏற்பட்ட இயற்கையானது என்றாலும், உடல்நல பாதிப்புக்கு மிக முக்கியமான இன்னொரு காரணம் ஒன்று இருக்கிறது. அதற்கு முன் அந்த நடிகை யார் எனத் தெரிந்துகொள்வோம். ஹாலிவுட்டில் சினிமாவில் 4 வயதில் நடிக்கத் தொடங்கியவர் டேவி எலிசபெத் சேஸ். ஏழு வயதில், 'சப்ரினா தி டீனேஜ் விட்ச்' என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் ஹாலிவுட்டில் மிகப்பெரிய புகழை பெற்றார். 

2002 ஆம் ஆண்டு வெளியான புகழ்பெற்ற 'தி ரிங்' திகில் திரைப்படத்தில் சமாரா மோர்கன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தது அவரை ஒரே இரவில் நட்சத்திரமாக உயர்த்தியது. இந்தப் படத்திற்காக 2003-ஆம் ஆண்டில் எம்டிவி திரைப்பட விருதையும் அவர் வென்றார். இப்படியாக சினிமா வாழ்க்கையில் முன்னேறிவந்தவர், 2016-க்குப் பிறகு திடீரென நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். 

அதன்பிறகு அவரது வாழ்க்கை வேறு திசையை நோக்கி நகர்ந்தது. அடிக்கடி சர்ச்சைகள், போதைப்பொருள் வழக்குகள் மற்றும் சட்டச் சிக்கல்களில் சிக்கிய நடிகை டேவி எலிசபெத் சேஸ் இப்போது துயரமான முடிவை சந்தித்திருக்கிறார். வாழ்வின் இறுதி நாட்களில் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்த வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்து நிர்கதியாக இருந்தார். 

தனது 13 வயதில் இருந்தே போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளான எலிசபெத் சேஸ், அது அதீதமாகி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பலவகை போதைப்பொருள் பயன்பாடு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது. 

அவரது மேலாளர் தெரிவிக்கையில், எலிசபெத் சேஸுக்கு முதலில் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டதாகவும், அது பின்னர் செப்சிஸ் நோயாக முற்றியதாகவும், சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். ஆனால், மரணத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மருத்துவப் பரிசோதகரின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் நடிகை எலிசபெத் சேஸ் மரணத்திற்கான முக்கிய காரணம் எய்ட்ஸ் என்பது தெரியவந்துள்ளதாக கூறியிருக்கிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!