Header Logo

செய்திகள்
எம்.பி அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்யக் கோரும் மனு விசாரணைக்கு

Jul 2, 2026 - 07:01 PM -

0

எம்.பி அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்யக் கோரும் மனு விசாரணைக்கு

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, விசாரணைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

'அபினவ நிவஹல் பெரமுன'வின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனு, இன்று (02) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மஹேன் கோபல்லவ முன்னிலையில் அழைக்கப்பட்டது. 

இதன்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து இந்த மனுவை விசாரணைக்கு எடுப்பதற்காக மிக அருகாமையிலான திகதி ஒன்றினை வழங்குமாறு கோரினார். 

எதிர்மனுதாரரான பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்னவும் அந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என 'அத தெரண' நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கமைய, குறித்த மனு மீதான விசாரணையை ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைப்பதற்கு நீதியரசர் உத்தரவிட்டுள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படும் சந்தர்ப்பத்திலும் அவர் அரசாங்க வைத்தியராகப் பணியாற்றி வந்தார் எனவும், அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைய அரசாங்க ஊழியர் ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படுவது சட்டத்திற்கு முரணானதுடன், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கான தகைமையீனமாகும் என்றும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!