Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
பாவா லட்சுமணனுக்கு எம்.எல்.ஏ. விடுதி அறையை வழங்கிய அமைச்சர்!

Jul 3, 2026 - 12:19 PM

பாவா லட்சுமணனுக்கு எம்.எல்.ஏ. விடுதி அறையை வழங்கிய அமைச்சர்!
Mobitel Inner 1278

வாம்மா... மின்னல். மாயி அண்ணே வந்திருக்காக... மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக... மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வந்திருக்காக... வாம்மா... மின்னல்... என அழைப்பார் பாவா லட்சுமணன். 

சரத்குமார், வடிவேலு, பாவா லட்சுமணன் இணைந்து நடித்த இந்த காமெடி இன்றும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது. தொடர்ந்து வடிவேலுடன் பல காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். 

திரையில் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் பாவா லட்சுமணனின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமயமானது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட பாவா லட்சுமணன் கே.கே.நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். 

அப்போது நோய் தாக்கம் அதிகமாகி காலில் விரல்கள் அகற்றப்பட்டது. நோய் தாக்கத்தினாலும், பொருளாதார நெருக்கடியிலும் சிக்கி உறவினர் வீட்டில் இருந்து வெளியேறி சாலிகிராமத்தில் உள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தின் வாசலில் படுத்திருந்தார். இவரது நிலையை கண்டு மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ், கூல் சுரேஷ் ஆகியோர் லெஜெண்ட் சரவணன் மூலமாக ரூபா 2 லட்சம் நிதி உதவி வாங்கி கொடுத்தனர். மேலும் பல திரையுலக பிரபலங்களும் அவருடைய வைத்திய சிகிச்சைக்கு பணம் கொடுத்தனர். 

ஒரு பக்கம் நோய் தாக்கம், இன்னொரு பக்கம் வறுமை மற்றும் தங்குவதற்கு வீடின்றி அலுவலக வாசலில் பாவா லட்சுமணன் தங்கி இருந்த தகவல் அமைச்சர் ராஜ்மோகன் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

நடிகர் பாவா லட்சுமணனின் நிலையை நேரடியாக வந்து பார்த்த அமைச்சர் ராஜ்மோகன் உடனடியாக அவரை தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த சேப்பாக்கம் எம்.எல்.ஏ. விடுதி அறையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். பாவா லட்சுமணனிடம், அமைச்சர் ராஜ்மோகன் ஒரு 6 மாதம் எனக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கி இருங்கள். அதற்கு பிறகு நிரந்தரமாக நீங்கள் தங்கி இருப்பதற்கு இடம் ஏற்பாடு செய்து தருகிறேன் என கூறினார். 

அமைச்சர் ராஜ்மோகனின் செயலை கண்டு நடிகர் பாவா லட்சுமணன் நெகிழ்ச்சி அடைந்து அவருக்கு நன்றி தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
07
ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

Sep 21, 2026 - 11:49 AM


காணொளி
மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

Mobitel 1278