Header Logo
Mogo Academy

செய்திகள்
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு பிணை

Jul 3, 2026 - 04:22 PM -

0

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு பிணை
Mobitel inner

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னரே, கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

2006ஆம் ஆண்டு இலங்கை கடற்படைக்கு நிறைவேற்றுப் பிரிவு அதிகாரியாக உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்திராத யோஷித ராஜபக்ஷவை இணைத்துக்கொண்டமை மற்றும் அதுவரை காணப்பட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியின் பயிற்சிப் பாடநெறி ஒன்றிற்காக அரசாங்கப் பணத்தைச் செலுத்தி யோஷித ராஜபக்ஷவை அதில் பங்கேற்கச் செய்தமை ஆகிய நடவடிக்கைகள் மூலம் ஊழல் புரிந்ததாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் கடற்படைத் தளபதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara