Header Logo
SLIC
கிழக்கு
அநுர அரசாங்கத்தில் ஊழலுக்கு இடம் இல்லை!

Jul 3, 2026 - 06:13 PM

அநுர அரசாங்கத்தில் ஊழலுக்கு இடம் இல்லை!
Mobitel Inner 1278
EDEX Inner

பொய்களை கூறுவதில் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைத்தேர்ந்தவர் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு குற்றம் சுமத்தியுள்ளார். 

மட்டக்களப்பில் அண்மையில் சேதமடைந்த புதுப்பாலத்தில், தற்காலிக பாலம் ஒன்றை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார். 

அத்துடன் அண்மைய தினங்களிலே சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் மீதான பல்​வேறு குற்றச்சாட்டுகள் தற்​போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

​மேலும் அவர் தற்​போது அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் கேலிக்கைக்குள்ளாக்குவதாகவும், அவரது செயற்பாடுகள் எப்படிப்பட்டது என மக்கள் நன்கு அறிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

அரசாங்கம் விசாரணைகளை சரியான முறையிலே முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர், எவ்வித பொய்க் குற்றச்சாட்டுகளை​​யோ அல்லது அரசியல் அழுத்தங்களை​யோ அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டார். 

அத்துடன் குறித்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் எவ்வித ஊழல் சம்பவங்களும் இடம்பெற வாய்ப்பில்லை என அவர் தெரிவித்தார். 

அதேநேரம், சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட, ஊழல் இல்லாத முறையில் சிறப்பான ஒரு பாலத்தை அமைப்போம் என கந்தசாமி பிரபு உறுதியளித்தார். 

​மேலும் எமது ஆட்சியில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்களில் எவ்வித ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க முடியாது என எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278