Header Logo
Mogo Academy

செய்திகள்
கொழும்பின் பல பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர்வெட்டு

Jul 4, 2026 - 06:55 AM -

0

 கொழும்பின் பல பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர்வெட்டு
Mobitel inner

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று (04) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, இன்று காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையான காலப்பகுதிக்குள் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளுடன் பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவை, IDH, கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, கடுவலை, மஹரகம, பொரலஸ்குமுவ மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. 

இதற்கு மேலதிகமாக தெஹிவளை, கல்கிஸ்சை, இரத்மலானை, மொரட்டுவை, ராவதாவத்தை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

மின்சார விநியோகக் கட்டமைப்பின் முல்லேரியா உப மின்நிலையத்துடன் தொடர்புடைய அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதால் இவ்வாறு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், தெஹிவளை நீர் உந்து நிலையம் மற்றும் மாளிகாவத்தை எலிஹவுஸ் உந்து நிலையம் ஆகியவற்றிலும் மின்சாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் அன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara