Jul 4, 2026 - 02:32 PM -
0
டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு இணையாக கடுவலை மாநகர சபையினால் 'குணு பொல' என்ற பெயரில் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சூழலை தூய்மையாக வைத்திருப்பதுடன், கழிவுகளை முறைப்படி அகற்றும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டம், பெலவத்தை, படபொதவில் அமைந்துள்ள ரொபர்ட் குணவர்தன மாவத்தையை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் அப்பிரதேசத்திலுள்ள வீடுகளில் சேரும், நும்புகள் பெருக வாய்ப்புள்ள பொருட்கள், பழைய டயர்கள் மற்றும் ஏனைய உக்காத கழிவுகளை முறைப்படி அகற்றுவதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
