Jul 4, 2026 - 05:31 PM -
0
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. குற்றாலத்திலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.
மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அரு விகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தற்போது அருவி பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடைகள், ஹோட்டல் வியாபாரம் சூடுபிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

