Jul 4, 2026 - 10:31 PM -
0
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (04) பிற்பகல் முதல் ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த வீதியின் குடாகம பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் மழையுடனான வானிலையுடன், அந்த வீதியில் வாகனங்களைச் செலுத்தும்போது அவதானத்துடன், மெதுவாக வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோருகின்றனர்.

