Header Logo
Mogo Academy

செய்திகள்
நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றம்: காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Jul 6, 2026 - 10:42 AM -

0

 நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றம்: காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Mobitel inner

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவும் பதற்றநிலை காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

 

காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

-------------------------

UPDATE: 

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இன்று (06) மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. 

 

நேற்று இடம்பெற்ற மோதலில் கைதிகள் இருவர் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று ஏற்பட்டுள்ள புதிய மோதல் சம்பவத்தில் மேலும் 20 பேர் காயமடைந்து  நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நேற்று மதியம் 1 மணியளவில் விளக்கமறியல் கைதிகள் குழுவிற்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த வன்முறைக்குக் காரணமாக அமைந்தது. 

 

பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் கடும் முயற்சியால் நேற்று மாலை நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த போதிலும், இன்று காலை மீண்டும் பதற்றம் மூண்டுள்ளது சிறைச்சாலை நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

 

தற்போது சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 


MOST READ

காணொளி
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று இது!

அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று இது!

பாராளுமன்றில் அர்ச்சுனா!

பாராளுமன்றில் அர்ச்சுனா!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

Mobitel Upahara