Header Logo
Mogo Academy

விளையாட்டு
கண்ணீருடன் விடைபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Jul 7, 2026 - 10:11 AM -

0

கண்ணீருடன் விடைபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
Mobitel inner

ஸ்பெயினுக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து, 2026 பிஃபா உலகக் கிண்ண தொடரில் இருந்து போர்த்துக்கல் வெளியேறியதால், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கிண்ண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 

காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில், இரண்டாம் பாதியின் கூடுதல் நேரத்தில் மாற்று வீரரான மிக்கேல் மெரினோ கோல் அடித்ததால், ஸ்பெயின் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

2006 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் முதன்முதலில் விளையாடிய ரொனால்டோ, இந்த உலகக் கிண்ணமே தனது கடைசி உலகக் கிண்ணமாக இருக்கும் என்று போட்டிக்கு முன்னதாகவே அறிவித்து இருந்தார். இந்தப் போட்டி நிறைவை குறிக்கும் இறுதி விசில் ஒலித்த பிறகு, போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கண்ணீரை அடக்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். 

டல்லாஸ் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அந்த சூப்பர் ஸ்டார் கால்பந்து வீரரை உற்சாகப்படுத்த, அவரது போர்த்துக்கல் அணி வீரர்கள் சிலர் அவருக்கு ஆறுதல் கூறினர். 

2010 இல் தென் ஆப்பிரிக்காவில் தனது ஒரே உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு, ஸ்பெயின் முதல் முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணி ஏதிர்வரும் 10 ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெல்ஜியம் அணியுடன் விளையாடும். 

ரொனால்டோ, முதல் முறையாக, தொடர்ச்சியாக இரண்டாவது தொடரில் போர்த்துக்கலை காலிறுதிக்கு அழைத்து செல்ல முயன்றார். ஆனால், சர்வதேச கோல்களில் எல்லா காலத்திலும் முன்னணியில் இருக்கும் அவரது கால்பந்து வாழ்க்கை, கால்பந்தின் மிகப்பெரிய மேடையில் முடிவுக்கு வந்துவிட்டது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara