Header Logo
Mogo Academy

செய்திகள்
அவசர ஒத்திவைப்பு விவாதத்திற்கான கோரிக்கை!

Jul 7, 2026 - 11:29 AM -

0

அவசர ஒத்திவைப்பு விவாதத்திற்கான கோரிக்கை!
Mobitel inner

நிலையியற் கட்டளை 19(1) இன் கீழ் அவசர ஒத்திவைப்பு விவாதத்திற்கான கோரிக்கை ஒன்றை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 

"சிறைப்படுத்தப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் அரசாங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர்கள் விளக்கமறியலில் உள்ளவர்களாக இருக்கலாம், கைதிகளாக இருக்கலாம். அவர்கள் அரசாங்கத்தின் பொறுப்பிலேயே இருக்கிறார்கள். எனவே,அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள கைதிகள் மற்றும் அந்தத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உயிர் பாதுகாப்புத் தொடர்பிலான அடிப்படைப் பொறுப்பு அரசாங்கத்திற்கே உரியது." தொகுதி 280 - இலக்கம் 07, 2020 நவம்பர் 30 ஹன்சாட் அறிக்கை. 

ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரண்டு தினங்களுக்குள் நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பாரதூரமான அமைதியின்மை மற்றும் மோதல்கள் காரணமாக, அறிக்கை செய்யப்பட்டுள்ளதன் பிரகாரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். எனவே, மேற்கூறிய மரணங்கள் மற்றும் காயங்கள் தொடர்பிலான முழுமையான பொறுப்பு அரசாங்கத்தையே சாரும். 

அதற்கிணங்க, இவ்விடயத்திலுள்ள பாரதூரத்தன்மை மற்றும் அவசரத் தன்மையைக் கருத்திற்கொண்டு, இது தொடர்பாக பாராளுமன்றத்தின் அவசர கவனத்தைச் செலுத்துவதற்காக நிலையியற் கட்டளை 19(1) இன் கீழ் அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றிற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு தங்களிடம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என எதிர்க்கட்சி தலைவர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று இது!

அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று இது!

பாராளுமன்றில் அர்ச்சுனா!

பாராளுமன்றில் அர்ச்சுனா!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

Mobitel Upahara