Header Logo
SLIC
வணிகம்
HayWind நிறுவனத்தின் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்திற்கான 10 காற்றாலை விசிறிகளும் இலங்கையை வந்தடைந்தன

Jul 7, 2026 - 11:38 AM

HayWind நிறுவனத்தின் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்திற்கான 10 காற்றாலை விசிறிகளும் இலங்கையை வந்தடைந்தன
Mobitel Inner 1278
EDEX Inner

தேசிய மின் கட்டமைப்பில் 50MW புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை இணைக்கும் பணி ஆரம்பம் Hayleys Fentons Limited நிறுவனத்தின் காற்றாலை மின்சக்திப் பிரிவான HayWind One Limited நிறுவனம், அதன் 50MW மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்திற்கு அவசியமான, முழுமையான 10 காற்றாலை விசிறிகளும் (wind turbines) தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இத்திட்டம் அதன் கட்டுமான மற்றும் நிறுவல் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. 

கடந்த மே மாதம் திருகோணமலை துறைமுகத்திற்கு முதலாவது தொகுதியாக 5 காற்றாலை விசிறிகள் வந்தடைந்ததைத் தொடர்ந்து, தற்போது ‘Envision Energy Technology Pte Ltd’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 10 காற்றாலை விசிறிகளும் வெற்றிகரமாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டம் 110 மீற்றர் உயரமான கோபுரங்கள் மற்றும் 76 மீற்றர் நீளமான விசிறிகளைக் கொண்ட தலா 5MW காற்றாலைகளை உள்ளடக்கியுள்ளது. இது இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான ஒற்றைத் தள (single-site) காற்றாலை மின்னுற்பத்தி நிறுவல்களில் ஒன்றாக அமைகிறது. 

திருகோணமலை துறைமுகத்திலிருந்து மன்னார் திட்ட தளத்திற்கு காற்றாலை உதிரிப்பாகங்களைக் கொண்டு செல்லும் பணிகள் Hayleys Advantis Limited நிறுவனத்தின், திட்ட பொருட்கள் கையாளுகை (logistics) பிரிவின் ஆதரவுடன் தடையின்றி இடம்பெற்று வருகின்றன. அனைத்து காற்றாலைகளும் தற்போது நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், HayWind நிறுவனம் பாரிய அளவிலான நிறுவலுக்கான ஆயத்தங்கள் மற்றும் மின் விநியோகத்திற்கான தயார்நிலை நடவடிக்கைகளை மும்முரப்படுத்தியுள்ளது. இந்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் செயற்பாட்டிற்கு வரும்போது, தேசிய மின் கட்டமைப்பில் 50MW புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திறன் சேர்க்கப்படுவதுடன், அதன் 20 வருட காலத்திற்காக இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் செலவில் சுமார் ரூ. 100 பில்லியன் சேமிப்பை நாட்டுக்கு ஈட்டித் தரும். அத்துடன், இத்திட்டமானது அந்நியச் செலாவணி சேமிப்பு, உள்நாட்டு வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்படுத்தல் மற்றும் இலங்கையின் காலநிலை மற்றும் வலுசக்தி மாற்ற இலக்குகளுக்கும் பங்களிப்புச் செய்யும். 

இந்த முக்கிய மைல்கல் குறித்து Hayleys Fentons நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக்க தெரிவிக்கையில், "அனைத்து காற்றாலை உதிரிப்பாகங்களும் வந்தடைந்திருப்பதானது, இலங்கையின் பல்வகை புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை நோக்கிய நகர்வில் ஒரு முக்கியமான படியாகும். இத்திட்டமானது, அதன் அளவையும் தாண்டி, நாட்டின் முக்கிய மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் அதே வேளையில், சர்வதேச அளவில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான நமது திறனை பிரதிபலிக்கிறது. மிக முக்கியமாக, இலங்கையின் நிபுணத்துவத்தின் மூலம் நுட்பமான உட்கட்டமைப்புகளை வழங்குவதில், உள்ளூர் பொறியியல் திறனின் வலிமையை இது நிரூபிக்கிறது. 2026 டிசம்பருக்குள் இந்த முக்கியமான மின்னுற்பத்தி நிலையத்தை இயக்க நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்." என்றார். 

Hayleys Fentons நிறுவனத்தின் வலுசக்தி பிரிவின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷேன் பெரேரா தெரிவிக்கையில், "அனைத்து காற்றாலை விசிறிகளையும் பாதுகாப்பாக நாட்டிற்குள் கொண்டு வருவது ஒரு மிகப் பாரிய, பொருள் கையாளுகை சவாலாக இருந்த போதிலும், அடுத்து வரவுள்ள பணிகள் எம்மை மிகவும் உற்சாகப்படுத்துகின்றன. எமது குழுவினர் ஏற்கனவே மன்னாரில் சிவில் கட்டுமானப் பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், அனைத்து உதிரிப்பாகங்களும் தயார் நிலையில் இருப்பதானது, முழு நம்பிக்கையுடன் அதன் நிறுவலுக்குச் செல்ல எமக்கு. வழிவகை செய்கிறது. இந்தத் திட்டமானது, இலங்கை பொறியியலாளர்களால் முன்னெடுக்கப்படுவதுடன், இதுவே, இத்துறையில் நாம் தொடர்ச்சியாக கட்டியெழுப்ப விரும்பும் திறனும் ஆகும்." என்றார். 

Hayleys Fentons Limited நிறுவனம், தனது சூரியசக்திப் பிரிவான 'Hayleys Solar’ இன் நிரூபிக்கப்பட்ட சாதனைகள் மூலம் இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் முன்னிலை வகிப்பதை. உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூலம், தற்போது HayWind One Limited ஊடாக அதே நிரூபிக்கப்பட்ட திறனை காற்றாலை மின்சக்தித் துறைக்கும் விரிவுபடுத்தி, இலங்கையின் முதன்மையான பன்முகப்படுத்தப்பட்ட புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முன்னோடி எனும் தனது நிலையை மீள உறுதிப்படுத்துகிறது. 

HayWind One Limited நிறுவனம் பற்றி, 

Hayleys Fentons Limited நிறுவனத்தின் காற்றாலை மின்சக்திப் பிரிவான HayWind, அரசாங்க மற்றும் பொதுப்பயன்பாட்டு அளவிலான திட்டங்களுக்கான பாரிய அளவிலான காற்றாலை மின்சக்தித் தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. நிலையான தன்மை, புத்தாக்கம், பொறியியல் விசேடத்துவம் ஆகியவற்றிற்கு வலுவான முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் நம்பகமான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற, காற்றாலை மின்சக்தி உட்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் பசுமை வலுசக்தியை நோக்கிய இலங்கையின் நகர்விற்கும் ஆதரவளிக்கிறது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278