Header Logo
Mogo Academy

செய்திகள்
நடுவானில் தடம் மாறிய பாகிஸ்தான் விமானம் மாயம்!

Jul 8, 2026 - 08:17 AM -

0

நடுவானில் தடம் மாறிய பாகிஸ்தான் விமானம் மாயம்!
Mobitel inner

பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட சரக்கு விமானம் ஒன்று மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஐக்கிய அரபு இராஜியத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிப் பறந்து கொண்டிருந்த போயிங் 737 ரக சரக்கு விமானம், அதன் வழிகாட்டும் அமைப்பில் (Navigation System) ஏற்பட்ட கோளாறு குறித்து அறிவித்த பின்னர், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பை இழந்துள்ளதாக பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் நடந்த போது விமானத்தில் ஐந்து பணியாளர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விமானக் கண்காணிப்புச் சேவையான 'Flightradar24' இன் முதற்கட்ட தரவுகளின்படி, 27 ஆண்டுகள் பழமையான இந்த விமானம் கராச்சி நகருக்கு தென்மேற்கு கடல் பகுதியை நெருங்கும்போது அதன் உயரத்தை திடீரென பலமுறை மாற்றியுள்ளதுடன், அதன் பின்னர் மிக வேகமாக கீழ்நோக்கி இறங்கியுள்ளது. 

எனவே இந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், அது இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. 

விபத்து குறித்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விமானம் மற்றும் அதன் பணியாளர்களின் நிலை குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara