Header Logo
Mogo Academy

விளையாட்டு
நாங்கள் அநியாயமாக ஏமாற்றப்பட்டோம்!

Jul 8, 2026 - 09:56 AM -

0

நாங்கள் அநியாயமாக ஏமாற்றப்பட்டோம்!
Mobitel inner

பிஃபா உலகக் கிண்ண தொடரின் ‘சுற்று 16’ நாக்-அவுட் போட்டியில் அர்ஜென்டினாவிடம் 3 - 2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறிய பிறகு, எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹசன் நடுவர் முடிவுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த போட்டியில், 67 ஆவது நிமிடம் வரை எகிப்து 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் இறுதிக்கட்டத்தில் அர்ஜென்டினா அபாரமாக கம்பேக் கொடுத்தது. 79 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியன் ரொமேரோவும், 84 ஆவது நிமிடத்தில் லியோனல் மெஸ்சியும் கோல் அடித்து ஆட்டத்தை 2 - 2 என சமன் செய்தனர். பின்னர் கூடுதல் நேரத்தின் 90+2 ஆவது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் வெற்றிக்கான கோலை அடிக்க, அர்ஜென்டினா 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. 

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹசன், "நாங்கள் அநியாயமாக ஏமாற்றப்பட்டோம். எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. எங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு பெனால்டி மறுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, அந்த முடிவு VAR மூலம் கூட சரிபார்க்கப்படவில்லை. நாங்கள் அடித்த 2 ஆவது கோலும் ரத்து செய்யப்பட்டது. ஒருவேளை நடப்பு உலக சாம்பியன் தொடரில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது மெஸ்சி தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதற்காகவோ இப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம்" என்று குற்றம்சாட்டினார். 

எகிப்து பயிற்சியாளரின் இந்த கருத்து தற்போது கால்பந்து ரசிகர்களிடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara