Header Logo
Mogo Academy

செய்திகள்
கபிலவின் மரணம் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு நினைவூட்டல்

Jul 8, 2026 - 12:02 PM -

0

கபிலவின் மரணம் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு நினைவூட்டல்
Mobitel inner

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன இறந்து கிடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மருந்துகள் தொடர்பான அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (08) அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. 

இதன்போது, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், மரணமடைந்தவர் இறந்து கிடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சில அடையாளம் தெரியாத மருந்துகள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அந்த இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவித்தனர். 

இதற்கு மேலதிகமாக, மரணமடைந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

இதற்கமைய, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, குறித்த மருந்துகள் தொடர்பான அரசாங்க இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்து, அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்புமாறு உத்தரவிட்டார். 

அத்துடன், பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரி கொழும்பு சட்டவைத்திய அதிகாரி அலுவலகத்திற்கும் நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்புமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார். 

அதனைத் தொடர்ந்து, இந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக வழக்கை ஜூலை மாதம் 22 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara