Header Logo
Mogo Academy

விளையாட்டு
அர்ஜென்டினாவுக்கு எதிரான தோல்வி!

Jul 8, 2026 - 06:25 PM -

0

அர்ஜென்டினாவுக்கு எதிரான தோல்வி!
Mobitel inner

பிஃபா உலகக் கிண்ண வரலாற்றின் மிகச்சிறந்த கம்பேக் ஆட்டங்களில் ஒன்றை அர்ஜென்டினா அணி பதிவு செய்துள்ளது. 

நேற்று (07) இரவு அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற 'சுற்று 16' (Round of 16) நாக்-அவுட் போட்டியில், ஆரம்பம் முதலே எகிப்து அதிரடி காட்டியது. 15 ஆவது நிமிடத்தில் யாசர் இப்ராஹிம் முதல் கோலை அடித்து எகிப்தை முன்னிலை பெற செய்தார். 

தொடர்ந்து 67 ஆவது நிமிடத்தில் முஸ்தபா ஜிகோ மேலும் ஒரு கோல் அடிக்க, அர்ஜெண்டினா 0 - 2 என்ற பின்னடைவை சந்தித்தது. 

இருப்பினும் இறுதிக்கட்டத்தில் அர்ஜெண்டினா அபாரமாக விளையாடியது. 79 ஆவது நிமிடத்தில் மெஸ்சியின் உதவியுடன் கிறிஸ்டியன் ரொமேரோ கோல் அடித்து கணக்கை தொடங்கினார். அதன் பின்னர் 84 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸியே ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 2 - 2 என சமன் செய்தார். 

கூடுதல் நேரத்தின் 90+2 ஆவது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் வெற்றிக்கான கோலை அடிக்க, அர்ஜெண்டினா 3 - 2 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா காலிறுதிக்கு முன்னேறியது. 

உலகக் கிண்ண கால்பந்து தொடர் முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்றா? எகிப்தின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் பரபரப்பு போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹசன் நடுவர் முடிவுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

நாங்கள் அநியாயமாக ஏமாற்றப்பட்டோம். எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. எங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு பெனால்டி மறுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, அந்த முடிவு VAR மூலம் கூட சரிபார்க்கப்படவில்லை. நாங்கள் அடித்த 2 ஆவது கோலும் இரத்து செய்யப்பட்டது. என தெரிவித்தார். 

இந்த நிலையில், எகிப்து கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் அபோ ரிடா, போட்டி நடுவர் பிரான்சுவா லெடெக்ஸியருக்கு எதிராக பிஃபாவிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


MOST READ

காணொளி
இது மிகவும் மோசமான செயல்!

இது மிகவும் மோசமான செயல்!

ரவிக்கரன் வலியுறுத்தல்!

ரவிக்கரன் வலியுறுத்தல்!

நிறுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து

நிறுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவில்லை!

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவில்லை!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

Mobitel Upahara