Header Logo
Mogo Academy

செய்திகள்
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

Jul 9, 2026 - 07:05 AM -

0

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
Mobitel inner

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 

இதற்கமைய, இன்று (09) காலை 6.00 மணி நிலவரப்படி WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.28 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.03 சதவீத அதிகரிப்பாகும். 

அத்துடன், பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.81 டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.01 சதவீத உயர்வாகப் பதிவாகியுள்ளது. 

ஐக்கிய அரபு இராச்சியத்தின் மேர்பன் ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 73.57 டொலர்களாகக் காணப்படுவதுடன், இது 6.67 சதவீத பாரிய விலை உயர்வை பதிவு செய்துள்ளது. 

எவ்வாறாயினும் இலங்கை நேரப்படி நேற்றிரவு 10 மணியளவில் பிரெண்ட ரக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 80 டொலரை எட்டியிருந்தது

இதேவேளை ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள ஈரானின் துறைமுக நகரங்களான சிரிக் மற்றும் பண்டர் அப்பாஸ் உள்ளிட்ட ஈரானின் தெற்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த புதிய தாக்குதல்களுக்குப் பின்னர், ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது, 

நேற்று ஈரான் நடத்திய கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு பழித்தீர்க்கும் நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். 

இது மீண்டும் நடந்தால், நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 

இந்தத் தாக்குதல்கள் குறித்து ஈரான் இதுவரை எவ்வித பதிலையும் உடனடியாக வழங்கவில்லை. 

எனினும், எந்தவொரு தாக்குதலுக்கும் உடனடி பதில் வழங்கப்படும் என ஈரானின் சிரேஸ்ட அதிகாரிகள் முன்னதாக எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara