Header Logo
Mogo Academy

விளையாட்டு
ரஷ்யா மீதான தடையை நீக்கியது சர்வதேச ஒலிம்பிக் குழு

Jul 9, 2026 - 09:03 AM -

0

ரஷ்யா மீதான தடையை நீக்கியது சர்வதேச ஒலிம்பிக் குழு
Mobitel inner

கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா அங்குள்ள சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 

அத்துடன் தங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைன் பிராந்தியங்களில் உள்ள ஒலிம்பிக் பேரவைகளையும் தங்கள் ஒலிம்பிக் குழுவுடன் இணைத்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரஷ்ய ஒலிம்பிக் குழுவுக்கு, சர்வதேச ஒலிம்பிக் குழு தடை விதித்தது. 

இதனால் சர்வதேச ஒலிம்பிக் குழு நடத்தும் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் நேரடியாக பங்கேற்பதில் சிக்கல் உருவானது. 

2024-ஆம் ஆண்டு பெரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர்கள் தங்கள் நாடு சார்பில் கலந்து கொள்ள முடியவில்லை. 

அவர்கள் பொதுவான வீரர்கள் என்ற பெயரில் சர்வதேச ஒலிம்பிக் குழு கொடியின் கீழ் பங்கேற்றனர். 

இந்த நிலையில் ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தடை நீக்கப்பட்டு இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் குழு நேற்று அறிவித்தது. 

இது குறித்து அதன் தலைவர் கிர்ஸ்டி கவென்ட்ரி கூறுகையில், 'நாங்கள் எந்தவொரு போர் நடவடிக்கையையும் ஆதரிக்கவில்லை. லொஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் தொடங்குவதாலும், இந்த போட்டிகளில் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டியது அவசியம் என்பதாலும் செயற்குழுவில் ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தடை நீக்கத்துக்கான முடிவு எடுக்கப்பட்டது. 

விளையாட்டு வீரர்களை, அவர்கள் நாட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு பொறுப்பாக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். 

ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தடை தளர்த்தப்பட்டு இருப்பதால் அந்த நாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் அதிக அளவில் பங்கேற்க வழிவகை பிறந்துள்ளது. 

அதேநேரத்தில் ரஷ்ய வீரர்கள் மீது நிறைய ஊக்கமருந்து சர்ச்சை இருப்பதால் அவர்களுக்கு கடுமையான ஊக்க மருந்து சோதனை நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் ரஷ்ய வீரர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியின் கீழ் பங்கேற்பது குறித்தோ, போட்டிகளில் அந்த நாட்டு தேசிய கீதம் இசைக்கப்படுவது பற்றியோ இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 

தடை நீக்கப்பட்டதை ரஷ்ய விளையாட்டு அமைச்சும் வரவேற்றுள்ளது. ஆனால் இந்த முடிவுக்கு உக்ரைன் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

சர்வதேச ஒலிம்பிக் குழு தடையை நீக்கி இருந்தாலும், தடகளம், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விளையாட்டு சம்மேளனங்கள் ரஷ்யாவை தங்களது போட்டிகளில் பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற முடிவை மாற்ற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


MOST READ

காணொளி
தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

இது மிகவும் மோசமான செயல்!

இது மிகவும் மோசமான செயல்!

ரவிக்கரன் வலியுறுத்தல்!

ரவிக்கரன் வலியுறுத்தல்!

நிறுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து

நிறுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவில்லை!

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவில்லை!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

Mobitel Upahara