Header Logo
Mogo Academy

செய்திகள்
சீனாவின் காலணித் தலைநகரத்தில் பாரிய தீ விபத்து - 28 பேர் பலி

Jul 9, 2026 - 10:11 PM -

0

சீனாவின் காலணித் தலைநகரத்தில் பாரிய தீ விபத்து - 28 பேர் பலி
Mobitel inner

தென்கிழக்கு சீனாவின் ஜின்ஜியாங் (Jinjiang) நகரில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையொன்றில் இன்று (09) மதியம் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரச செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் காணொளிகளின்படி, தீப்பற்றிய கட்டிடத்திலிருந்து பெரும் கரும்புகை வானை நோக்கி எழும்புவதையும், தொழிற்சாலையின் கூரை மீது சிக்கிக்கொண்ட பணியாளர்கள் சிலர் உதவி கோரி அலறுவதையும் காண முடிகிறது.

நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு, தொழிற்சாலையின் உள்ளே இருந்த 200-க்கும் மேற்பட்டோரைப் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்தத் துயரமான சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இந்தத் தீ விபத்து பெருமளவிலான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த விபத்துக்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிய வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பான அல்லது அலட்சியமாகச் செயல்பட்ட நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட ஜின்ஜியாங் நகரமானது சீனாவில் மட்டுமன்றி உலக அளவிலும் 'காலணித் தலைநகரம்' (Shoe Capital) என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

தரவுகளின்படி, உலகின் ஒட்டுமொத்த காலணி உற்பத்தியில் கிட்டத்தட்ட 20% இந்த ஒரு நகரிலிருந்தே பெறப்படுகிறது. இங்கு அமைந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூலம் ஆண்டுதோறும் 1.2 பில்லியனுக்கும் அதிகமான ஜோடி காலணிகள் உலகச் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

இது மிகவும் மோசமான செயல்!

இது மிகவும் மோசமான செயல்!

ரவிக்கரன் வலியுறுத்தல்!

ரவிக்கரன் வலியுறுத்தல்!

நிறுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து

நிறுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவில்லை!

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவில்லை!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

Mobitel Upahara