Jul 12, 2026 - 10:38 PM -
0
2018ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கிய படம் "சிலுக்குவார் பட்டி சிங்கம்". அந்த படம் சுமாரான வெற்றி பெற்ற நிலையில், அதன்பிறகு செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கடந்த 2022ல் வெளியான "கட்டா குஸ்தி" படம் பாக்ஸ் ஆபிஸில் 30 கோடி வசூலித்தது.
இந்த நிலையில் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கட்டா குஸ்தி கூட்டணி அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்த நிலையில், கடந்த ஜூலை 3ம் தேதி "கட்டா குஸ்தி-2" திரைக்கு வந்தது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்த கட்டா குஸ்தி -2 படம் திரைக்கு வந்து 9 நாட்களில் 37 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. அதோடு, தொடர்ந்து இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவதால் முதல் பாகத்தை விட கட்டா குஸ்தி- 2 இன்னும் பெரிய அளவில் வசூலிக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உடன் யோகி பாபு, முனீஸ் காந்த், காளி வெங்கட், ரம்யா கிருஷ்ணன், சாரா சயானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
