Jul 14, 2026 - 04:36 PM -
0
சென்சார் சான்றிதழ் சிக்கல் தீர்ந்த நிலையில் ஹெச். வினோத் இயக்கிய ஜனநாயகன் ரிலீஸுக்கு தயாராகிவிட்டதால் சிக்மா படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
அரசியலுக்கு செல்லும் முன்பு விஜய் கடைசியாக நடித்து முடித்த ஜனநாயகன் படம் சட்டசபை தேர்தலுக்கு முன்பே ரிலீஸாக வேண்டியது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் இடியாப்ப சிக்கல் ஏற்பட்டதால் தள்ளிப் போனது. அண்மையில் தான் ஜனநாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்தது. இதையடுத்து ஜூலை 24 ஆம் திகதி ஜனநாயகனை ரிலீஸ் செய்யப் போகிறார்கள். இதனால் ஜூலை 31 ஆம் திகதி ரிலீஸாக வேண்டிய ஜேசன் சஞ்சய்யின் முதல் படமான சிக்மா தள்ளிப் போகிறது.
வெளிநாட்டில் படித்துவிட்டு நாடு திரும்பிய ஜேசன் சஞ்சய் தன் சொந்த முயற்சியால் சிக்மா பட வாய்ப்பை பெற்றார். சந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து அவர் இயக்கியிருக்கும் படத்தை பார்க்க சினிமா ரசிகர்கள் காத்திருக்கும் நேரத்தில் விஜய் படத்தால் ஜேசனின் படம் தள்ளிப் போடப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஒரு இயக்குநரின் முதல் பட ரிலீஸ் ரொம்ப முக்கியமானது. இந்நிலையில் அப்பா படத்திற்காக மகன் பட ரிலீஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதே என்று சினிமா ரசிகர்கள் ஜேசனுக்காக வருத்தப்படுகிறார்கள்.
சிக்மா படத்தை இயக்குவதற்கு முன்பே ஜேசன் சஞ்சயை தேடி நடிக்க வாய்ப்புகள் வந்தது. இந்நிலையில் படங்களில் நடிக்கவும் செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறார். ஜேசன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. சிக்மா ரிலீஸ் வேலையை முடித்துவிட்டு ஹீரோவாக நடிக்கப் போகிறார் ஜேசன். நடிகராக அவர் பெரிய ரவுண்டு வரட்டும் என்று சினிமா ரசிகர்கள் வாழ்த்துகிறார்கள்.
