Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
இரண்டு நாட்களுக்கான பாராளுமன்ற அலுவல்களில் மாற்றம்

Sep 21, 2026 - 10:07 PM

இரண்டு நாட்களுக்கான பாராளுமன்ற அலுவல்களில் மாற்றம்
Mobitel Inner 1278

நாளை (22) முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது. 

இந்த பாராளுமன்ற வாரத்தில், நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) ஆகிய திகதிகளுக்கான பாராளுமன்ற அலுவல்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். 

பிரதிச் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலியின் தலைமையில் இன்று கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலேயே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய, நாளை மு.ப 11.30 மணி முதல் பி.ப.5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு, செப்டம்பர் 23 புதன்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 23 புதன்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகச் சட்டமூலத்தைச் சமர்பிக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

அத்துடன், செப்டம்பர் 23 ஆம் திகதி மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 17,213 மில்லியன் ரூபாய் நிதி மானியத்தை வழங்குவதற்கான குறைநிரப்பு மதிப்பீடும் அங்கீகரிக்கப்படவுள்ளது. 

இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு 2026.09.22 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

இந்தக் குறைநிரப்பு மதிப்பீட்டிற்குத் தேவையான நிதியொதுக்கீடானது, 2026 ஆம் ஆண்டிற்காக நிரல் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், ஆண்டின் இறுதி வரை பயன்படுத்தப்படமாட்டாது என அடையாளம் காணப்பட்ட நிதியொதுக்கீடுகளின் மூலமே பெறப்படுகின்றது. 

அதற்கமைய, இந்நிதியொதுக்கீட்டு பரிமாற்றமானது 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மொத்தச் செலவின எல்லைக்கோ அல்லது அரசாங்கத்தின் அதிகபட்சக் கடன் பெறும் எல்லைக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்படுகின்றது. 

செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளுக்குத் தீர்மானிக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278