Header Logo
Mogo Academy

சினிமா
தாய்லாந்தில் ஜெயராமும் நானும் பிச்சை எடுத்து 100 ரூபாய் சம்பாதித்தோம்!

Jul 15, 2026 - 09:59 AM -

0

தாய்லாந்தில் ஜெயராமும் நானும் பிச்சை எடுத்து 100 ரூபாய் சம்பாதித்தோம்!
Mobitel inner

தமிழ், மலையாளம், தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையான பாவனா அவர் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவம் குறித்து கூறியதாவது, 

நானும் ஜெயராமும் நடித்த ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து கொண்டிருந்தது. படத்தில் ஜெயராமுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ள நடிகர்களில் ஜெயராமும் ஒருவர். தாய்லாந்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது கிடைத்த ஓய்வு நேரத்தில் நகைச்சுவைக்காக பிச்சை எடுக்கத் திட்டமிட்டோம். 

அங்கு ஒரு இடத்தில் இருவரும் தரையில் அமர்ந்து கண்ணில் பட்ட ஒன்றை எடுத்து வாசித்தோம். நாம் பிறந்தநாள் முதல் என்பது போன்ற பாடல்களை பாடினோம். முதலில் அந்த பாடல் சுவாரசியமாக இல்லை. சிறிதுநேரம் கழித்து நான் நடனமாடுவேன். ஜெயராம் பாடல் பாடுவார். 

அடுத்ததாக ஜெயராம் நடனமாடுவார். இப்படியே நாங்கள் செய்து கொண்டிருந்தபோது அங்கு சென்று கொண்டிருந்தவர்கள் கையில் இருந்த பணத்தை வைத்து விட்டுச் சென்றனர். அதற்குள் ''ஷாட்'' ரெடியாகிவிட்டது. 

எங்களால் 100 ரூபாய் மட்டுமே சம்பாதிக்க முடிந்தது. அந்த நூறு ரூபாயை எல்லோரிடமும் காட்டி இது எங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணம் என்று சொன்னோம். நாங்கள் தரையில் அமர்ந்து கெஞ்சி பிச்சை எடுத்துக் கொண்டிருந்த காட்சிகளை வீடியோவாக எடுத்து படத்தின் இறுதி காட்சியில் சேர்த்தனர் என தெரிவித்தார்.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

Mobitel Upahara