Header Logo
Mogo Academy

செய்திகள்
தேர்தலில் போட்டியிடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க அனுமதி

Jul 15, 2026 - 10:34 AM -

0

தேர்தலில் போட்டியிடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க அனுமதி
Mobitel inner

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தெரிவு செய்யப்படும், அரசியல் உரிமைகளைக் கொண்ட அரச அதிகாரிகளுக்கு சம்பளத்துடனான 6 நாட்கள் விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது சம்பளமற்ற விடுமுறையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

அதற்கமைய, நிறுவன ஆணைக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தின் 2:3:4 உப பிரிவைத் திருத்தி வெளியிடப்பட்ட 2021 ஜூன் 25ஆம் திகதியிட்ட 12/2021 இலக்க அரச நிர்வாகச் சுற்றறிக்கையை மேலும் திருத்தி புதிய விதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

2026 ஜூன் 22ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நிறுவன ஆணைக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தில் 2:3:4:1 என்ற புதிய உப பிரிவொன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

 

அந்த புதிய விதியின்படி, உள்ளூராட்சி மன்றமொன்றின் பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தெரிவு செய்யப்படும் அதிகாரி ஒருவருக்கு, முன்னர் இருந்தவாறு சம்பளத்துடனான 6 நாட்கள் விடுமுறையைப் பெற்றுக்கொள்ள அல்லது தனது விருப்பத்திற்கமைய அந்தப் பதவிக் காலத்திற்குள் சம்பளமற்ற விடுமுறையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

 

இந்தத் திருத்தமானது அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

Mobitel Upahara