Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
மனைவியின் கண் முன்னே பிரபல தொழிலதிபர் பலி!

Jul 15, 2026 - 11:44 AM

மனைவியின் கண் முன்னே பிரபல தொழிலதிபர் பலி!
Mobitel Inner 1278

தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான புக்கெட்டில் பேராசெயிலிங் (Parasailing) சாகச விளையாட்டின் போது 71 வயது அவுஸ்திரேலிய முதியவர் ஒருவர் வானத்தில் இருந்து கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி நெஞ்சைப் பதறவைக்க வைத்துள்ளது. 

அந்த வீடியோவில், அவுஸ்திரேலியவை சேர்ந்த 71 வயதுடைய பிரபல தொழிலதிபர் ரோஜர் ஹசி. விடுமுறையில் நேரத்தை கழிப்பதற்காக தனது மனைவியுடன் ரோஜர் ஹசி தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான புக்கெட்டிற்கு வந்துள்ளார். 

அப்போது பேராசெயிலிங் (Parasailing) சாகச விளையாட்டை மேற்கொண்டுள்ளார். சாகச விளையாட்டு மேற்கொள்வதை மனைவி புகைப்படம் எடுக்க கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பேராசெயிலிங் ரைடு செய்வதற்கு முன் ,பேராசெயிலிங் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பாதுக்காப்பு உடைகளை அணிவித்துள்ளனர். 

பேராசெயிலிங் செய்யப் போறோம் என்ற பயங்கர ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் ரெடியாவதை பார்க்க முடிகிறது. பின்னர் 71 வயதான ரோஜர் ஹசி கடற்கரை தரையில் இருந்து மெல்ல, மெல்ல, வானத்திற்கு பறந்தார். இந்த காட்சிகளை கடற்கரைக்கு அருகில் இருந்த மனைவில் கேமிராவில் வீடியோவாக பதிவு செய்திருந்தார். ஆனால், அவர் காற்றில் பறக்கத் தொடங்கிய அடுத்த 18 ஆவது வினாடியில், சுமார் 30 மீட்டர் (100 அடி) உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரெனப் பிடி நழுவி நேராகக் கடலுக்குள் விழுந்தார். 

கடற்கரையில் நின்று இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் என்ன நடக்கிறது என்று கணிக்கக் கூட முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.கடலில் விழுந்த ரோஜர் ஹசியை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். அப்போது அவருக்கு மூச்சு விடுவதில் கடுமையான சிரமம் இருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. உடனே அவர் பட்டோங் (Patong) வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த மொத்த விபத்தையும் அவரது மனைவியே வீடியோ எடுத்துள்ளார். என் கணவருக்கு பேராசெயிலிங் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, அதற்கான வாய்ப்பு கிடைத்ததும் ரொம்பவே ஆர்வமாக இருந்தார் என்று கண்ணீருடன் தெரிவித்து கதறி அழுதார். 

இந்தக் கொடூர விபத்தைத் தொடர்ந்து, ரோஜர் ஹசியை இழுத்துச் சென்ற படகோட்டி மற்றும் அவருடன் பேராசூட்டில் சென்ற உதவியாளர் ஆகிய இருவரையும் தாய்லாந்து பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது அலட்சியமாகச் செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பொலிஸ் விசாரணையில் ரோஜர் ஹசி காற்றில் பறக்கும்போது தவறுதலாகத் தனது பாதுகாப்பு பெல்ட்டைப் பிணைத்திருந்த கொக்கியை (Hook) இழுத்துவிட்டதே அவர் கடலில் விழக் காரணம் என்று அந்த ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். 

அவரது மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய தற்போது பிரேதப் பரிசோதனை நடந்து வருகிறது. அவர் பெல்ட்டில் இருந்து எப்படிக் கழன்றார், இதற்கு யார் காரணம் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278