Jul 15, 2026 - 12:12 PM -
0
மாமன், லப்பர் பந்து, கருப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்வாசிகா.
ஆரம்பத்தில் சீரியலில் நடித்திருந்தாலும் இப்போது படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகா நடிகை நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். திருமணமாகி நடித்து வரும் ஸ்வாசிகாவுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரின் போட்டோஷூட்டுக்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில், சினிமாத்துறையில் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வாசிகா கூறுகையில், 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு நடிக்க வந்துவிட்டேன். நிறைய மேனேஜர்கள் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். சில இடங்களுக்கு செல்லும் போது ரொம்பவும் பயமாக இருக்கும். ஏ ஆர் முருகதாஸை பார்க்கலாம், லிங்குசாமியை பார்க்கப் போகலாம் என்று சொல்லி என் அம்மாவிடம் நகையெல்லாம் வாங்கி ஏமாற்றி விட்டார்கள். அதற்கு பிறகு அம்மாவுக்கும் பயம் வந்துவிட்டது.
அந்நேரத்தில் வைகை, கோரிப்பாளையம் இரண்டும் வெளியாகி இருந்த போது எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டை விட்டு சென்று கேரளா சென்றோம். அங்கு மலையாள சினிமாவில் முயற்சி செய்து காத்திருந்த நேரத்தில் சும்மா இருப்பது சரி என தோன்றாமல் தான் நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியலில் நடிப்பது என முடிவெடுத்தேன். லப்பர் பந்து படம் வந்தப்பின் தான் எனக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு கிடைத்தது.
நிறைய பேர் கண் கலங்கினார்கள். இன்றும் 10 சதவீதம் மேனேஜர்கள் சினிமாவில் ஏமாற்றுவதற்காகவே இருக்கிறார்கள் என்று நடிகை ஸ்வாசிகா தெரிவித்துள்ளார். இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
