Jul 15, 2026 - 01:29 PM -
0
நடிகை சமந்தா வீட்டில் இப்போது ஒரே கொண்டாட்டம் தான். விரைவில் தாயாகப் போகும் அவருக்கு, நேற்று (14) குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் இந்த புகைப்படங்களைப் பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமந்தாவும், அவரது கணவரும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமோருவும் தங்கள் முதல் குழந்தைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் 2025 இறுதியில் கோயம்புத்தூரில் திருமணம் நடந்தது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சமந்தாவுக்கு குழந்தை பிறக்கும் எனத் தெரிகிறது. இந்த வளைகாப்பு விழாவில் சமந்தா மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். கணவர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் இந்த விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
குடும்பத்தினர் மத்தியில் நடந்த இந்த விழாவில், சமந்தா தனது மாமியாருடன் இருந்த நெகிழ்ச்சியான தருணங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. கடந்த ஜூன் மாதம் 'எங்கள் தங்கம்' பட வெற்றி விழாவில்தான் சமந்தா முதல்முறையாக பேபி பம்ப் உடன் தோன்றினார். அப்போதுதான் அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பின்னர், அப்படத்தின் இயக்குநர் இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
சமந்தா தனது கர்ப்பகால அனுபவங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். ஆனால், இந்த வளைகாப்பு விழா குறித்து சமந்தா தம்பதியினர் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. ஆனாலும், சமூக வலைதளங்களில் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இந்த தம்பதிக்கு பெரிய அளவில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
