Header Logo
Mogo Academy

செய்திகள்
குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி நிர்ணயம்

Jul 15, 2026 - 03:26 PM -

0

குமார ஜயகொடிக்கு எதிரான  வழக்கின் விசாரணை திகதி நிர்ணயம்
Mobitel inner

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் இந்த வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சிகள் இருவரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து, மேலதிக சாட்சி விசாரணையை செப்டம்பர் 07 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

2014 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில், அந்நிறுவனத்தின் களஞ்சிய வளாகத்தில் கார்பட் இடும் பணிகளை மேற்கொள்வதை தனியார் நிறுவனமொன்றிடம் கையளித்தபோது, குறித்த நிறுவனத்திற்கு சாதகமாகச் செயல்பட்டதன் மூலம் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

Mobitel Upahara