Header Logo
Mogo Academy

செய்திகள்
சிகரெட்டுக்களுக்கு அரசாங்கம் வரிச்சலுகை வழங்குவதாக சஜித் குற்றச்சாட்டு

Jul 15, 2026 - 04:02 PM -

0

 சிகரெட்டுக்களுக்கு அரசாங்கம் வரிச்சலுகை வழங்குவதாக சஜித் குற்றச்சாட்டு
Mobitel inner

அரசாங்கம் விவசாய உபகரணங்களுக்கு மேலும் வரிகளை விதித்துள்ள போதிலும், சிகரெட்டுகளுக்கு தொடர்ச்சியாக வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று இன்று (15) இடம்பெற்றது. 

சுனில் கமகேவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கலந்துரையாடலில் பங்கேற்று அவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

2026 ஜனவரி முதல் ஜூலை 14 வரை சிகரெட் நிறுவனத்திற்கு 9.2 பில்லியன் இலங்கை ரூபாய் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 

விவசாயம் செய்வதற்குத் தேவையான விவசாய உபகரணங்களுக்கு அரசாங்கம் இந்த வரிச் சலுகைகள் பெற்றுக் கொடுக்கவில்லை. 

சிகரெட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளையும், விவசாய உபகரணங்களுக்கு வரிச் சுமையை மேலும் மேலும் அதிகரிப்பதற்கே இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். 

நெற்செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளைப் பாதுகாப்பதாகக் கூறி, அரசாங்கம் நிலையான விலையாக நாட்டு நெல்லுக்கு 120 ரூபாவும், சம்பாவிற்கு 130 ரூபாவும், கீரி சம்பாவிற்கு 140 ரூபாவும் என்ற அடிப்படையில் விலைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது. 

ஆனால் தேர்தல் காலங்களில் வயல் வெளிகளுக்குள் இறங்கி நெற் கதிர்களைத் கடித்துக் கொண்டு, நெல்லுக்கு 150 ரூபாய் நிலையான விலையை நாட்டின் சட்டமாக மாற்றித் தருவோம் என்று பிரஸ்தாபித்தனர். 

முன்னர் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை. நமது நாட்டில் சமகாலத்தில் விவசாயம் நட்டமடையும் ஒரு தொழிலாக மாறியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

Mobitel Upahara