Header Logo
Mogo Academy

செய்திகள்
NIC இன்றியும் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்

Jul 15, 2026 - 06:43 PM -

0

NIC இன்றியும் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்
Mobitel inner

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் 03.07.2026 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 23.07.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலை ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு விண்ணப்ப ஒழுங்குமுறைக்கான அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுள்ளது 

அதேநேரம் தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தமது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதற்கமைய தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் உரிய இறுதித் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளாமையானது பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பம் செய்வதில் எவ்வித தடையுமில்லை என்பதை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. 

எனவே சகல விண்ணப்பதாரிகளும் ஊடக வெளியீட்டுக்கமைய 23.07.2026 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க முடியும். 

இதேவேளை எவ்வித காரணங்களுக்காகவும் விண்ணப்பத்திற்கான இறுதித்திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 


MOST READ

காணொளி
கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

Mobitel Upahara