Jul 15, 2026 - 06:48 PM -
0
2026 ஆம் ஆண்டுக்கான 31 வது சுமதி விருது வழங்கும் விழா இன்று (15) இடம்பெற்று வருகின்றது.
கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் தற்சமயம் நடைபெற்று வருகின்றது.
இந்த விழாவில் ஆண்டின் சிறந்த நடப்பு விவகாரங்களுக்கான நிகழ்ச்சிக்கான விருதை அத தெரணவின் "ரீபில்ட் ஸ்ரீலங்கா" (Rebuild Sri Lanka)நிகழ்ச்சிக்காக ருக்மல் மல்லவவுக்கு கிடைத்தது.
இந்த விருது வழங்கும் விழாவில் அத தெரண அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட, கே.சீ. சாரங்க இயக்கிய Science for Life நிகழ்ச்சி ஆண்டின் சிறந்த கல்விசார் நிகழ்ச்சிக்கான விருதையும் வென்றுள்ளது.
அதேநேரம் இந்த நிகழ்வில் அத தெரண' அலைவரிசை சிறந்த புலனாய்வுச் செய்தி அறிக்கை மற்றும் சிறந்த நடப்பு விவகாரங்களுக்கான செய்தி அறிக்கையிடலுக்கான (Best Current Affairs Reporting) விருதை வென்றுள்ளது.
டிஜிட்டல் ஊடகப் பிரிவின் கீழ், Best Lifestyle and Fashion நிகழ்ச்சிக்கான விருதை தெரண மெக்ரோ என்டர்டெய்ன்மென்ட்டின் (Derana Macro Entertainment) "பல்ஸ்" (Pulse) இணையத்தளம் வென்றுள்ளது.
