Header Logo
Mogo Academy

செய்திகள்
500 தேயிலைக் கிராமங்களை நிறுவும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

Jul 15, 2026 - 09:39 PM -

0

 500 தேயிலைக் கிராமங்களை நிறுவும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்
Mobitel inner

2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராமாகவும், தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் உயர்த்துவதற்கான தேசிய இலக்கை அடையும் நோக்கில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் "சிலோன் டீ கிராமம்" (Ceylon Tea Village) 500 தேயிலைக் கிராமங்களை நிறுவும் தேசிய வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த தேசிய வேலைத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டிற்குள் நாடளாவிய ரீதியில் உள்ள 144 தேயிலை பரிசோதகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் 144 தேயிலைக் கிராமங்களை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. 

இதற்கு இணையாக, பதுளை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மாதிரி கிராமமான ஹாலி எல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பஹமுணுகொட கிராம உத்தியோகத்தர் பிரிவின் உடகம கிராமத்தில் இன்று (15) ஒரு சிறப்பு ஆரம்ப விழா நடைபெற்றது. 

இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை தேயிலை சபையின் உயர் அதிகாரிகள், உள்ளூர் அரசியல் தலைவர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களும் கலந்துகொண்டனர். 

இந்த தேசிய வேலைத்திட்டமானது இலங்கையின் சிறு தேயிலை தோட்டத்துறையின் நிலையான வளர்ச்சியை நோக்கிய ஒரு முக்கிய படியாகும் என்பதுடன், இதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, தேயிலை தொழில்துறையை நவீனமயமாக்குவது மற்றும் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவது என்பன எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், இது 2030ஆம் ஆண்டுக்கான இலங்கையின் தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் ஒரு பலமான பங்களிப்பை வழங்கும்.


MOST READ

காணொளி
கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

Mobitel Upahara