Jul 15, 2026 - 11:55 PM -
0
எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டில் ஹலம்பகே சந்துன் சம்பத் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு பலபிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சுமார் 15 வருடங்களாக நீடித்த இந்த நீண்ட வழக்கு விசாரணையின் தீர்ப்பை நீதிபதி ருசிர வெலிவத்த இன்று (15) அறிவித்தார்.
முதலாம் எதிரியான வஹும்கபுரக திலக் புஷ்பகுமார மற்றும் இரண்டாம் எதிரியான வீரதுங்க சமிந்த ஆகிய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவையின் 296வது பிரிவின் கீழ் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
