Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
திருமணத்திற்குப் பின் பெண்கள் உச்சி திலகம் வைப்பது ஏன் தெரியுமா?

Jul 16, 2026 - 08:51 AM

திருமணத்திற்குப் பின் பெண்கள் உச்சி திலகம் வைப்பது ஏன் தெரியுமா?
Mobitel Inner 1278

இந்து மதப் பாரம்பரியத்தில் திருமணமான பெண்களிடம் மங்கள அடையாளமாக விளங்குவது மாங்கல்யமும், நெற்றி மற்றும் தலை வகிட்டில் வைக்கும் குங்குமம் தான். "மங்கல நங்கையர் மங்கல சின்னம்" என்று போற்றப்படும் இந்த குங்குமம் வைக்கும் பழக்கத்திற்குப் பின்னால், வெறும் ஆன்மீகக் காரணங்கள் மட்டுமின்றி, அறிவியல் மற்றும் மருத்துவக் காரணங்களும் ஒளிந்துள்ளன. 

சாஸ்திரங்களின்படி, பெண்களின் தலை வகிடு பகுதி என்பது செல்வத்திற்கும் மங்கலத்திற்கும் அதிபதியான மகா லட்சுமி தேவியின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. 

திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் தன் வகிட்டில் குங்குமம் இடும்போது, அந்த இல்லத்தில் லட்சுமியின் மனம் நிறைந்து, வறுமை நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். 

நெற்றி மற்றும் வகிடு பகுதி மனித உடலின் ஆற்றல் மையங்களில் ஒன்றாகும். வெளியில் செல்லும்போது பிறரின் தீய எண்ணங்கள், கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை அதிர்வுகள் ஒரு பெண்ணைத் தாக்காமல் இருக்க, இந்த குங்குமம் ஒரு பாதுகாப்பு கேடயமாகச் செயல்படுகிறது. 

பாரம்பரிய நம்பிக்கையின்படி, ஒரு பெண்ணின் தலை வகிட்டில் இருக்கும் குங்குமம் அவளது கணவனின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகிறது. 

தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பெண்கள், தங்களின் கணவனின் நலனுக்காகத் திருமணத்திற்குப் பின் தினசரி தங்களின் வகிடு மற்றும் நெற்றிப் பகுதியில் குங்குமத்தை வைத்து கொள்கிறார்கள். தினமும் கணவரிடம் குங்குமம் வைப்பது குடும்பத்தில் குழப்பம் ஏற்படாமல் சீராக அமையும். 

பெண்களின் நெற்றி மற்றும் வகிடு பகுதி நெற்றிச் சுட்டி அணியும் இடம் உடலின் மிக முக்கியமான நரம்புகள் சந்திக்கும் இடமாகும். இதற்கு 'பிரம்மரந்திரம்' என்று பெயர். 

மோதிர விரலால் இங்கு குங்குமத்தை லேசாக அழுத்தி வைக்கும் போது, அந்தப் புள்ளி தூண்டப்பட்டு மன அழுத்தம், பதற்றம் மற்றும் தலைவலி குறைகிறது. 

பெண்களின் மாதவிடாய் சுழற்சி மற்றும் பிரசவ காலக் கட்டங்களில் ஹார்மோன் சமநிலை மிக முக்கியம். வகிடு பகுதியில் குங்குமம் வைக்கும்போது, அது மூளையின் 'பினியல்' மற்றும் 'பிட்யூட்டரி' சுரப்பிகளைத் தூண்டுகிறது. 

இது பெண்களின் ஹார்மோன் சுரப்பைச் சீராக்கி, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. 

திருமணமான பெண்கள் என்ன தான் புடவை கட்டி, நகைகள் அணிருந்திருந்தாலும் அழகான சிவப்பு நிறத்தில் நெற்றில் வட்டமான பொட்டு வைத்து, அதற்கு மேல் உச்சி வகுட்டில் குங்குமத்தை வைத்து தங்களது முகத்தை பார்க்கும் போது அவ்வளவு அழகாக தெரியும். 

திருமணமான பெண்களுக்கென்று தனி சிறப்பும் தனி அழகும் தரக்கூடியது குங்குமம் பெண்களின் அழகுக்கே அழகு தரக்கூடிய ஒன்றாகும். 

நெற்றி குங்குமத்தை தங்களுக்கு விருப்பமான பெண்கள் மட்டும் வைப்பது நல்லது. 

அனைவரும் குங்குமம் வைக்க வேண்டிய கண்ணயம் இல்லை.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278